ராம்குமார் தற்கொலை : நீதிபதி நேரில் விசாரணை
பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யபட்ட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் நேற்று மாலையில் திடீரென தற்கொலை செய்து கொண்டார். மாலை சாப்பாட்டுக்காக வெளியில் வந்த ராம்குமார் திடீரென அங்கிருந்த வயரை பிடுங்கி வாயில் வைத்து கடித்தார். இதில் தூக்கி வீசப்பட்ட அவர் மயங்கி விழுந்தார்.
உடனடியாக சிறை வளாகத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு ராம்குமாரை தூக்கிச் சென்றனர். பின்னர் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட அவரது உடலை பரிசோதித்த டாக்டர்கள் ராம்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப் படுகிறது. பரிசோதனையை வீடியோவில் படம் எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ராம்குமார் தற்கொலை செய்து கொண்ட தகவல் கிடைத்ததும் அவரது உடல் வைக்கப்பட்டுள்ள ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி முன்பு பாதுகாப்புகாக போலீஸ் போடப்பட்டுள்ளது.ராயப்பேட்டை ஆஸ்பத்தி ரியில் பதட்டம் நிலவுவதால் இன்று பத்திரிகையாளர்கள் மற்றும் வெளியாட்கள் யாரும் ஆஸ்பத்திரியின் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
நீதி விசாரணை தொடங்கியது. திருவள்ளூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தமிழ்ச்செல்வி நீதி விசாரணை நடத்தி வருகிறார். ராம்குமாரின் தற்கொலை குறித்து திருவள்ளூர் பெண் நீதிபதி தமிழ்செல்வி இன்று விசாரணை நடத்தினார். காலை 9 மணி அளவில் புழல் சிறைசாலைக்கு சென்ற அவர் நேரில் விசாரணை நடத்தினார். ராம்குமாரின் குடும்பத்தினரிடம் அவர் விசாரணை நடத்த உள்ளார்.