தமிழகத்தின் 4 மாவட்டங்களில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்
தொடர்ந்து மழை பெய்து வரும் காரணமாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையுடன் சேர்த்து டெங்கு கொசு ஒழிப்பு பணியிலும் ஈடுபடுமாறு சுகாதாரத்துறைக்கு அறிவுரை வழங்கப்பட்டு இருக்கிறது.
டெங்கு என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன?
ஏடிஸ் என்னும் கொசுவினால் பரவக்கூடிய ஒரு வைரஸ் (Virus) கிருமியால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. இந்த வகைக் கொசு, மற்ற கொசுக்களைப் போலல்லாமல், பகல் வேளைகளில்தான் கடிக்கின்றது. டெங்கு காய்ச்சலில் (Dengue) தலைவலி, காய்ச்சல், தோலில் தடிப்புகள், உடம்பு வலிகள், இந்த அறிகுறிகள் 2-3 நாட்களுக்கு நீடிக்கலாம், இந்த நோய் தாக்கிய ஒருவருக்கு சுமார் மூன்று மாதங்கள் களைப்பாக உணர்வர். ஆனால் பொதுவாக இதற்கு சிகிச்சை தேவைப்படாது. இதுவே டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள்.
இந்நிலையில் தற்போது இந்த டெங்கு காய்ச்சல் (Dengue Fever) தென்காசி, மதுரை, தேனி, கோவை ஆகிய மாவட்டங்களில்வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது.,
டெங்கு கொசுவை ஒழிக்க தென்காசி மாவட்டத்தில் தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு சுகாதாரத் துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்து வரும் காரணமாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. ஒவ்வொரு வீட்டில் இருக்கக் கூடிய குளிர்சாதன பெட்டியின் பின்புறத்தில் உள்ள தண்ணீரில் கொசு உற்பத்தி ஆகாமல் தடுக்க அவ்வப்போது அதை சுத்தம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது இவ்வாறு அவர் கூறினார்.
ALSO READ | வயிற்றுப்போக்கு பிரச்சனையை போக்கும் கொய்யா இலை சாறு! நன்மைகள் என்ன?
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR