டெங்கு, மலேரியா, கோவிட், பாம்புக்கடி அனைத்திலும் தப்பித்து எமனுக்கே சவால் விடும் இந்தியர்

இந்த நபருக்கு முதலில் டெங்கு, மலேரியா வந்து கஷ்டப்பட்டாலும், சிகிச்சையில் குணமாகிவிட்டார். அதன் பிறகு கொரோனாவும் அவரை விட்டு வைக்கவில்லை. கொரோனாவை வெற்றி கொண்ட இந்த மனிதருக்கு சோதனை அத்துடன் முடியவில்லை. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 23, 2020, 04:08 PM IST
  • ராஜஸ்தானின் ஜோத்பூரில் பாம்பு கடித்தது
  • இயன் ஜோனாஸ் ஆபத்து கட்டத்தைத் தாண்டிவிட்டார்
  • இங்கிலாந்தில் வசிப்பவர் இயன் ஜோனாஸ்
டெங்கு, மலேரியா, கோவிட், பாம்புக்கடி அனைத்திலும் தப்பித்து எமனுக்கே சவால் விடும் இந்தியர் title=

எமனுக்கே சவால் விடும் மனிதர்களைப் பற்றி அவ்வப்போது கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் கொரோனா வைரஸ் பரவலுக்கு பிறகு திடீர் மரணங்களும், கொரோனாவுக்கு பலியானவர்கள் தொடர்பான தகவல்கள் என அனைவரும் சற்றே மனம் தளர்ந்திருக்கும் சமயத்தில் பல நோய்களை வென்று எமனுக்கே சவால் விடும் இந்தியர் ஒருவர் பற்றிய செய்தியை கேட்டால், நம்பிக்கைப் பிறக்கலாம்.

இந்த நபருக்கு முதலில் டெங்கு, மலேரியா வந்து கஷ்டப்பட்டாலும், சிகிச்சையில் குணமாகிவிட்டார். அதன் பிறகு கொரோனாவும் அவரை விட்டு வைக்கவில்லை. கொரோனாவை வெற்றி கொண்ட இந்த மனிதருக்கு சோதனை அத்துடன் முடியவில்லை.  

பிரிட்டன் குடியுரிமை பெற்ற இயன் ஜோனாஸ் (Ian Jones) என்பவர்  பல முறை மரணத்தை எதிர்கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார். அவர் இந்தியாவிற்கு வந்திருந்தபோது, முதலில் டெங்கு-மலேரியா ஏற்பட்டது. பின்னர் கொரோனா வைரசும் அவரை விட்டு வைக்கவில்லை. ஆனால் கொரோனாவையும் எதிர்கொண்டு வெற்றிபெற்றார். ஆனால், பிறகு நாகப் பாம்பு ஒன்று அவரை கடித்தது. பாம்பு கடித்த ஜோனாஸுக்கு உதவி செய்ய உலகெங்கிலும் உள்ள மக்கள் நன்கொடை அளித்துள்ளனர்.

ஜெய்ப்பூர்: பிரிட்டன் குடியுரிமை பெற்ற இயன் ஜோனாஸ் (Ian Jones) என்பவர்  பல முறை மரணத்தை எதிர்கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார். அவர் இந்தியாவிற்கு வந்திருந்தபோது, முதலில் டெங்கு-மலேரியா ஏற்பட்டது. பின்னர் கொரோனா வைரசும் அவரை விட்டு வைக்கவில்லை. ஆனால் கொரோனாவையும் எதிர்கொண்டு வெற்றிபெற்றார். ஆனால், நல்ல பாம்பு கடித்தாலும் அதை நல்ல முறையில் எதிர்கொண்டு எமனிடம் ஜாமீன் வாங்கிவிட்டார் எமகாதகர் ஜோனாஸ்.  

ஜோத்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

தெற்கு இங்கிலாந்தில் உள்ள Isle of Wight என்ற ஊரில் வசிக்கும் தொண்டு நிறுவன ஊழியரான   இயன் ஜோனாஸ், கொரோனா பரவுவதற்கு முன்னதாகவே தாயகத்திற்கு வந்தார்.  ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்ட அவர் உறவினர்களுடன் இருந்தபோது தான், ஒன்றன் பின் ஒன்றாக நோய்கள் அவரைத் தாக்கின. மூன்று நோய்களை வெற்றிகரமாக வென்ற ஜோனாஸை நாகப்பாம்பு ஒன்று கடித்த்து. அவர் உடனடியாக   ஜோத்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

நிதியுதவி

ஆபத்தான விஷம் கொண்ட பாம்பு கடித்த செய்தியை கேள்விப்பட்ட அவரது குடும்பத்தினர்    அதிர்ச்சியடைந்தார். ஜோனாஸின் சிகிச்சைக்காக பணம் திரட்டுவதற்கான பிரச்சாரமும் தொடங்கப்பட்டது. நிதி திரட்டும் பிரச்சாரம் வெள்ளிக்கிழமையன்று தொடங்கியது. அனைவரின் உதவியால், சிகிச்சைக்குத் தேவையான தொகை கிடைத்துவிடும் என்று குடும்பத்தினர் நம்பினார்கள். ஆனால்,  48 மணி நேரத்தில் வந்து குவிந்த நிதியுதவியின் மதிப்பு 16 லட்சத்துக்கு மேல் (£16,700) என்பதுதான் ஆச்சரியமான தகவல். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்த கடினமான நேரத்தில் உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் ஜோனாஸ் குடும்பத்தை ஆதரித்தனர்.

அனைவருக்கும் நன்றி
நிதியுததவி அளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர், இந்த தொகை இயன் ஜோனாசின் சிகிச்சைக்கு போதுமானது என்று  தெரிவித்தனர். ஜோத்பூரில் உள்ள தனது அலுவலகத்தில் ஜோனாஸ் இருந்தபோது, பாம்பு கடித்தது என்ற தகவலையும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.  

நிலைமை மிகவும் மோசமாக இருந்தது

பாம்புக் கடித்த பின்னர் ஜோனாஸை மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோது, முதல்கட்ட சிகிச்சையின்போது, அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்று மருத்துவமனை சந்தேகம் தெரிவித்தது. ஆனால் பரிசோதனை முடிவுகள் எதிர்மறையாக இருந்தது. பாம்பு கடித்ததற்கான அனைத்து அறிகுறிகளும் அவருக்கு இருந்தன. அவரது கண்பார்வை பலவீனமடையத் தொடங்கியது. ஜோனாஸால் நடக்க முடியவில்லை. மருத்துவமனை சிகிச்சைக்கு பிறகு ஜோனாஸின் உடல்நிலை மேம்பட்டு வருகிறது. தற்போது அவர் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

போராளி இயன் ஜோனாஸ்
'என் தந்தை ஒரு போராளி. அவர் இந்தியாவில் இருக்கும்போது, முதலில் டெங்கு மற்றும் மலேரியாவால் அவதிப்பட்டார், பின்னர் கொரோனா பாதிப்பும் ஏற்பட்டது. கொரோனா நெருக்கடி காரணமாக அவரால் இங்கிலாந்துக்கு திரும்ப முடியவில்லை. இதற்கிடையில், அவருக்கு பாம்பு கடித்த செய்தி கிடைத்து அதிர்ச்சியடைந்தோம். தற்போது அவர் ஆபத்து கட்டத்தைத் தாண்டிவிட்டார். அப்பா விரைவில் நாடு திரும்புவார் ' என்று இயன் ஜோனாஸின் மகன்   சைப் ஜோனாஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR 

 

Trending News