முழு ஊரடங்கில் ரேஷன் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி
முழு ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையிலும் ரேஷன் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த ஒருவாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்த ஊரடங்கு காலத்தில் ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை திறந்திருக்கும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகம் (Tamil Nadu) முழுவதும் இரண்டு நாள் தளர்வுகளுக்குப் பின் ஒரு வார தீவிர ஊரடங்கு (Lockdown) இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. வசியமின்றி யாரும் வெளியில் வர அனுமதி இல்லை, மளிகைக் கடைகள், காய்கறி, இறைச்சிக் கடைகள் திறக்க அனுமதி இல்லை. அவசியமின்றி வெளியே வந்தால் நடவடிக்கை என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ALSO READ | முழு ஊரடங்கை கடைபிடித்து COVID19 பரவல் சங்கிலியை உடைப்போம்: முதல்வர் ஸ்டாலின்
இதற்கிடையில் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 இரண்டு தவணைகளாக மே, ஜூன் மாதங்களில் வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. ற்போது மே மாத நிவாரணத் தொகை வழங்கிய நிலையில், ஜூன் மாதத்துக்கான நிவாரணத் தொகையும் ஜூன் 3ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில் தற்போது தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியதாவது., வரும் மே 31 அதிகாலை 6 மணி வரை ஊரடங்கு எவ்விதத் தளர்வுமின்றி நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் தனியார், ஐடி, மென்பொருள் துறை சார்ந்த ஊழியர்கள் முழுமையாக வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும். ஏடிஎம் வங்கிப் பணி சார்ந்த பணிகளுக்கு அனுமதி. இன்சூரன்ஸ், வங்கிப் பணி சார்ந்த ஊழியர்கள் 3ல் 1 பங்கு ஊழியர்கள் மட்டுமே இயங்க வேண்டும். ரேஷன் கடைகள் (Ration Shop) தினமும் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இயங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR