தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் கர்நாடக மாநிலம் குடகு ரெசார்ட்டில் தங்கியுள்ளது அனைவரும் அறிந்ததே. இன்று  தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்களை சந்தித்து ஆலோசனை நடத்திய தினகரன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போது செய்தியாளர்களிடம் தினகரன் தெரிவித்ததாவது:-


அதிமுகவை மீட்கவே எம்.எல்.ஏ-க்கள் குடகில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பதவி முக்கியம் இல்லை என்ற என்னத்துடன் கட்சியை மீட்பதற்கான போராட்டத்தினில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் கூடவிருக்கும் உன்மையான பொதுக்கூட்டத்தினில் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும். என தெரிவித்தார்.


முன்னதாக நடைப்பெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஆட்சிக்கு எதிராக வாக்களித்த பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்யாதது ஏன் என சபாநாயகருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.


பதவி ஆசையினில் அமைச்சர்கள் மாறி மாறி பேசி வருகின்றனர். தற்போது நடப்பது ஆட்சியே இல்லை. உன்மை விரைவில் வெளிவரும் எனவும் தெரிவித்தார்.


மேலும் ஜெ.,-வின் மரணம் குறித்து அவர் பேசுகையில், சசிகலாவினை நோய்தொற்று ஏற்படும் என்ற காரணத்தால் ஜெயலலிதாவை பார்க்ககூட மருத்துவர்கள் அனுமதிக்க வில்லை எனவும் தெரிவித்துள்ளார்.


ஜெ., சிகிச்சை பெற்றது தொடர்பான சிசிடிவி காட்சிகள் எங்கள் வசம் உள்ளது, பொதுச்செயலாளர் சசிகலா ஒப்புதல் இல்லாமல் காட்சிகளை வெளியிட முடியாது. விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டால் இந்த சிசிடிவி காட்சிகளை ஒப்படைக்க தயார். எனவும் அவர் தெரிவித்துள்ளார்.