டாஸ்மார்க் கடைகளில் மதுபானம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்கும் நடவடிக்கையாக ரசீது வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டாஸ்மார்க் கடைகளில் ஒரு குவாட்டர் பாட்டிலுக்கு அதிகபட்ச விற்பனை விலையை காட்டிலும் 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்பட்டு வருவதாக மது பிரியர்கள் மத வேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர்.  எனவே மதுக்கடைகள் முன்பு விலைப்பட்டியல் வைக்கப்பட வேண்டும் எனவும் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு பலமுறை எச்சரிக்கை எடுத்திருந்தாலும் டாஸ்மாக் ஊழியர்கள் அதனை பொருட்படுத்துவது இல்லை என்பது மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.



இந்நிலையில் கூடுதல் விலைக்கு மது வகைகள் விற்பனை செய்வதை தடுக்கும் நடவடிக்கையாக டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் சுப்பிரமணியன் அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள் அனைத்து மண்டல சிறப்பு பறக்கும், படை அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.  அதில் ஏற்கனவே அறிவித்தபடி டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் பார்வையில் படும்படி விலைப்பட்டியல் வைக்கப்பட வேண்டும். மது விற்பனைக்கு ரசீது பில் புத்தகம் மூலம் கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும்.  இந்த உத்தரவு கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை மாவட்ட மேலாளர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.  இதனை கடைபிடிக்காத ஊழியர்கள் மீது துறை ரீதியான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.



மேலும் டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் சுப்பிரமணியன் வெளியிட்ட மற்றொரு சுற்றறிக்கையில், சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் குற்றவியல் வழக்கொன்றில் டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மதுபானங்களை வாங்கி விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு மொத்தமாக விற்பனை செய்யும் ஊழியர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து மாவட்ட மேலாளர்கள் டாஸ்மார்க் ஊழியர்களிடம் விளக்கமாக தெரிவித்து அவர்களின் கையெழுத்து பெற வேண்டும்.  மொத்தமாக மது வகைகள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட உள்ளீர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR