தமிழகத்தில் கடந்த வருடம் கொரோனா தொற்று ஏற்பட்டதிலிருந்து பல்வேறு வகையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  கொரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.  அந்த வகையில் கடந்த ஜனவரியில் இருந்து இன்றுவரை தமிழகத்தில் 4 கோடி பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இமாலய சாதனை படைத்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் இன்று தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.  அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி 28 லட்சம் பேருக்கு இன்று ஒரே நாளில் தமிழ்நாடு அரசு சார்பாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.   இதில் அதிகபட்சமாக சென்னையில் 185370 பேருக்கு இன்று தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.  தமிழக அரசின் சார்பாக அரசு மருத்துவமனைகள் மூலம் 3,79,65,592 பேருக்கும், தனியார் மருத்துவமனைகள் மூலம் 2280173 பேருக்கும் COVID தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.


இந்த சாதனை குறித்து தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்,  "Covid 19-ஐ தடுத்து வெல்லும் ஆயுதமாம் தடுப்பூசி போடுவதை மாபெரும் பேரியக்கமாக நடத்தி வருகிறது தமிழ்நாடு அரசு.  இன்று 25 இலட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பது இந்தியச் சாதனை! இதுவரை 4 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பது இமாலய சாதனை!  மாரத்தான் வேகத்தில் செயல்படும் அமைச்சர் சுப்பிரமணியன் அவர்களுக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கும் மருத்துவர்கள் செவிலியர்க்கும் எனது நன்றி!  தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் செலுத்திக் கொள்ளுங்கள்! நம்மையும் காப்போம்; நாட்டையும் காப்போம்!" என்று கூறியிருந்தார்.


ALSO READ TN Corona Update செப்டம்பர் 12: தமிழகத்தில் இன்று 1608 பேருக்கு புதிதாக பாதிப்பு, 22 பேர் பலி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR