முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக்குயில் பல்வேறு சீர்த்திருத்த நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, தமிழ்நாட்டில் பள்ளி பாடப்புத்தகங்களில் உள்ள தமிழ் சான்றோர்களின் பெயர்களில் பின்னால் உள்ள சாதிப் பெயர்கள் தற்போது நீக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில், பன்னிரெண்டாம் வகுப்பு (12th Class) பாடப் புத்தகங்களில் தமிழறிஞர்களின் பெயரில் பின்னால் உள்ள சாதிப் பெயர்கள் (Caste) நீக்கப்பட்டு புத்தகங்கள் அச்சிடப்பட்டு இருப்பது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. மயூரம் வேதநாயகம் பிள்ளை என்பது வேதநாயகம் எனவும் உ.வே சாமிநாத அய்யர் என்பது உ.வே சாமிநாதர் எனவும் மாற்றப்பட்டுள்ளது. 


ALSO READ | ஜாதிப் பெயரை காரில் எழுதிய Lucknow இளைஞருக்கு நோட்டீஸ்


அதே போல நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை என்பது ராமலிங்கம் எனவும் மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்பது மீனாட்சி சுந்தரனார் எனவும் மாற்றப்பட்டுள்ளது. நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை என்பது ராமலிங்கம் என மாற்றப்பட்டுள்ளது. அதேபோல் மாயூரம் வேதநாயகம் பிள்ளை என்பது வேதநாயகம் என பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.


தமிழ்நாடு அரசின் இத்தகைய நடவடிக்கைக்குப் பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். 


ALSO READ | மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021: போன் மூலம் சாதிவாரிக் கணக்கெடுப்பு!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR