கலைஞர் கருணாநிதி விரைவில் நலம் பெறுவார் - இலங்கை ஜனாதிபதி!
திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் விரைவில் நலம் பெறுவார் என இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால் சிரிசேனா தெரிவித்துள்ளார்!
திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் விரைவில் நலம் பெறுவார் என இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால் சிரிசேனா தெரிவித்துள்ளார்!
சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கலைஞர் கருணாநிதி அவர்களின் உடல் நலம் குறித்து கேட்டறிய மருத்தவமனை வந்த இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால் சிரிசேனா அவர்களின் பிரதிநிதி திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் அவர்களிடம் இலங்கை ஜனாதிபதி அவர்களின் கடிதத்தினை வழங்கினார்.
வயது முதிர்வு மற்றும் உடல் நிலை சோர்வு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த சில நாட்களாக மருத்துவ கண்கானிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த ஜூலை 27-ஆம் நாள் இரவு அவருக்கு ரத்த அழுத்தக் குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின், அழகிரி, ராஜாத்தி அம்மாள், கனிமொழி மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பலரும் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்தடைந்தனர். பின்னர் நள்ளிரவில் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தலைவர் கருணாநிதி அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
காவிரி மருத்துவமனையில் மருத்துவ கண்கானிப்பில் இருக்கும் திமுக தலைவர் கருணாநிதி அவர்களை தலைவர்கள் பலரும் சந்தித்து வருகின்றனர். தலைவர்கள் பொதுமக்கள் என பலரும் கருணாநிதி உடல் நலம்பெற வேண்டும் என பிராத்தனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி அவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிய தலைவர்கள் பலரும் மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் இன்று இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால் சிரிசேனா அவர்களின் பிரதிநிதி காவேரி மருத்துவமனை வந்தடைந்தார்.
இச்சந்திப்பின் போது இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால் சிரிசேனா அவர்களின் கடிதத்தினை இலங்கை பிரதிநிதியிடம் இருந்து செயல் தலைவர் முக ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.