முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அதிமுக கட்சியின் சின்னமான இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கியது அனைவரும் அறிந்ததே.


சசிகலா சிறைக்கு சென்ற பிறகு தினகரன் தலைமையிலும் ஓபிஎஸ் தலைமையிலும் அணிகள் செயல்பட்டன. அப்போது இரட்டை இலை சின்னத்தைப் பெற எடப்பாடி - ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா - தினகரன் தரப்பினர்களும் தங்களது ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.


இந்த விவகாரம் தொடர்பாக, தலைமைத் தேர்தல் ஆணையத்தில் நடந்த விசாரணையில் எடப்பாடி - ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா - தினகரன் ஆகிய இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இதுதொடர்பான தீர்ப்பைத் தேர்தல் ஆணையம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. 


இந்தநிலையில், இரட்டை இலை சின்னம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஒதுக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரமாண பத்திரங்கள், எம்எல்ஏக்கள்,எம்.பி.,க்கள் ஆதரவு அடிப்படையில் இந்த முதிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுகிறது.