கோயம்புத்தூரில் ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி தொண்டர்கள் முன்னிலையில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், " இந்த இயக்கதினை அழிக்க எதிர்கட்சிகள் சதி செய்தன. ஆனால் இந்த இயக்கத்தை வலுவானதாக ஜெயலலிதா மாற்றினார். மற்ற மாநிலங்கள் பார்த்து பார்த்து வியக்கும் ஆட்சியை ஜெயலலிதா கொடுத்தார். அவர் மறைவிற்கு பின்னர் அவர்கள் கட்டி காப்பாற்றிய சட்டவிதிகள், அதிமுக தலைமை பொறுப்பிற்கு யார் வர வேண்டும் என்ற விதிகளை தூக்கி போட்டு விட்டனர். 11 எம்.எல்.ஏ ஆதரவுடன் இருந்த நான் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களித்து இருந்தால் ஆட்சி போயிருக்கும். நான் ஆதரவு கொடுத்ததால் ஆட்சியும்,கட்சியும் காப்பாற்ற பட்டது. தவறான வழியில் சென்ற போது எச்சரித்தேன். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | டிஆர்பி ராஜாவுக்கு சவால் விடுகிறேன்.. ரெடியா என கேட்டு சொல்லுங்கள் - அண்ணாமலை


ஆனால் அதிகார போதை, பணத்திமிரில் இருந்தார் எடப்பாடியால் ஆட்சி போனது. அடுத்தடுத்து தேர்தல்களிலும் தோற்று போனது. ஈரோடு இடைதேர்தலில்
தனியாக நின்றால் ஓட்டுக்கள் பிரியும். வாபஸ் வாங்கிடுங்கள் என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கேட்டார். அதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில்  வாபஸ் வாங்கினேன். ஆனால் 66 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அதிமுக ஈரோட்டில் தோற்று போனது. இந்த தேர்தல்களில் தோற்று போனதால் மக்கள் உங்களை ஏற்கவில்லை என்றுதானே அர்த்தம். எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் மத்திய அமைச்சராக வர இருந்ததை தடுத்தவர் . 


தனிக்கட்சியை எப்போதும் துவங்க மாட்டேன். தனிக்கட்சி ஆரமித்தால் உச்ச நீதிமன்ற வழக்கில் இடையூறு ஏற்படும். என்னை யாரும் துரோகி என்று சொல்ல முடியாது. ஆட்சியில் இருந்த போது கோப்புகள் என்னிடம் வந்துதான் செல்லும். அந்த ரகசியங்களை நான் அவுத்து விட்டால், எடப்பாடி பழனிச்சாமி  திகார் சிறைக்குதான் செல்ல வேண்டும். அமைப்பை வலுப்படுத்த வேண்டும். இதை 100 சதவீதம் செய்தால்தான் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்" என உரையாற்றினார்.


இதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், " ஜனவரி 19 ம் தேதி  உச்ச நீதிமன்றத்தில் வழக்கு வருகின்றது. அந்த வழக்கில் பொதுக்குழு தீர்மானம் தொடர்பான முடிவு கிடைக்கும். ஈரோட்டில் இரட்டை இலை தற்காலிகமாக தான் கொடுக்கப்பட்டது. ஒன்றுபட்டால்தான் வெற்றி அடையமுடியும். புரிய வேண்டியவர்களுக்கு இது புரியவேண்டும். நாங்கள் திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு செயல்படுவதாக சொல்பவன் முட்டாள். 


கொடநாடு கொலை கொள்ளை உட்பட பல வழக்குகளில் எந்த நடவடிக்கையும் இல்லை. மீண்டும் பிரதமராக மோடி தான் வர வேண்டும். 100 நாட்களில்  கொடநாடு குற்றவாளிகளை கண்டுபிடிப்பேன் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போதுசொன்னார்கள். அதில், ஆறு கொலைகள் நடந்துள்ளது. சில அரசியல் ரகசியங்கள் உண்மையில் இருக்கிறது. அதை வெளியில் சொல்ல முடியுமா?. அசியல் ரீதியாக எடப்பாடி பழனிச்சாமி மேலே வரவே முடியாது" என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் எடப்பாடி பழனிசாமி தலைமையை நாங்கள் ஏற்கமாட்டோம், பாஜகவுடனான எங்களுடைய உறவு சீராக இருக்கிறது என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். 


மேலும் படிக்க | சிதம்பரம்: கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட தீட்சிதர்கள் மறுப்பு - காவல்துறையில் புகார்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ