சென்னை: ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த ஆன்மிக உலகில் பெண்களையும் அதிகளவில் பங்கெடுக்க வைத்த பங்காரு அடிகளார் காலமானார். 82 வயதான பங்காரு அடிகளாரின் மேல்மருத்துவர் சித்தர் பீடம், பெண்களை மையப்படுத்தி ஒரு அமைப்பை எப்படி கட்டமைக்க வேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம். நிதி வசூலிப்பதிலிருந்து அந்த நிதியை நிர்வாகம் செய்வது வரை அங்கு எல்லோரும் பெண்களே என்பது குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆதி பராசக்தி சித்தர் பீடம் சார்பில் பல்வேறு கல்வி நிறுவனங்களும் இவர் நடத்தி வருகிறார். அவரது சேவையை பாராட்டி கடந்த 2019 மத்திய அரசு அவருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கி சிறப்பித்தது.



கோயில் கருவறைகளில் பெண்களும் பூஜை செய்யலாம் எனும் வழக்கத்தை தமிழகத்தில் பரவலாக்கியதும் மேல்மருத்துவர் சித்தர் பீடம்தான். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது மிகப் பெரிய சமயப் புரட்சியாக பாரக்கப்பட்டது.  உயர்சாதி மத குருக்கள் மட்டுமே தமிழகத்தில் பெரிய மத நிறுவனங்களை உருவாக்க முடியும் என்ற விதியை உடைத்தவர் பங்காரு. மிகவும் பிற்படுத்தப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து வந்த மதகுரு பங்காரு அடிகளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | விவசாயிகளுக்கு அரசு மானியம்! வாழ வைக்கும் வாழைக்கு 40% மானியம்


30 ஆண்டுகளுக்கு முன்னால் கல்வியிலும் பொருளாதாரத்திலும் மேல்மருவத்தூர்  மிகவும் பின்தங்கிய பகுதி. ஆனால், இன்று மேல்மருவத்தூரை கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பங்காருவின் சித்தர் பீடம் நிறைய முன்னேற்றியிருக்கிறது.


உடல் நல குறைவினால் உயிரிழந்த ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே ஒரு கிராமத்தில் ஆசிரியராக பணிபுரிந்தவர். கடந்த 1966ஆம் ஆண்டு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை  துவக்கினார்.


மெல்ல மெல்ல இந்த ஆலயம் பல்வேறு நாடுகளை சேர்ந்த பக்தர்ளை  ஒருங்கிணைந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றம் என துவக்கபட்டது. தைப்பூசம் போன்ற நாட்களில் 48 நாட்கள் சிறப்பு பூஜை மேற்கொண்டு அதனைத் தொடர்ந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பங்காரு அடிகளார் பக்தர்களுக்கு அளிப்பது வழக்கம்.


கடந்த இரண்டு மாத காலமாகவே சற்று உடல் நல குறைவில் இருந்து வந்த திரு பங்காரு அடிகளார் இன்று மாலை திடீர் மரணமடைந்தார். இதயவலி காரணமாக அவர் பாதிக்கப்பட்டு இருந்ததால், சிகிச்சை பெற்று வந்தார்.


மேலும் படிக்க | மாரிமுத்து மறைவு: 'சிகரத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தவனை மரணம்...' - வைரமுத்து உருக்கம்


இன்று மாலை திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து அவருக்கு உடனடியாக அவசர சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், சிகிச்சை பலன் அளிக்காமல் அம்மா என்றழைக்கப்படும் 82 வயது பங்காரு அடிகளார் மரணமடைந்தார்.


அடிகளாரின் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்துள்ள இரங்கலில், கருவறை அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வதில் தொடங்கி அனைத்து விதமான ஆன்மீகப் பணிகளிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கி ஆன்மீக குருவாக திகழ்ந்தவரும், பக்தர்களால் பாசமாக 'அம்மா' என அழைக்கப்படுபவருமான மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீட நிறுவனர் பத்மஸ்ரீ பங்காரு அடிகளார் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது, என்று குறிப்பிட்டுள்ளார்.



ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என முதலில் உருவாக்கி அனைவரின்  கவனத்தை ஈர்த்தவர்.


பல்வேறு பிரபல அரசியல் தலைவர்கள் ஆன்மீகவாதிகள் என அவ்வப்போது அவரை சந்திப்பது வழக்கம். உள்நாட்டில் மட்டுமல்ல மற்றும் வெளிநாடுகளிலும் சித்தர் பீடத்திற்கு ஏராளமான பக்தர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | தங்க நகை சீட்டு மூலம் மோசடி! பிரணவ் ஜூவல்லரியில் பூட்டை உடைத்து ஆய்வு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ