சென்னை ஆர்கேநகர் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட இசையமைப்பாளர் கங்கை அமரன் நியமிக்கப்பட்டடு உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆர்கேநகர் தொகுதிக்கு தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், நடிகை கவுதமி, இசை அமைப்பாளர் கங்கை அமரன் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டது. முதலில் நடிகை கவுதமி தான் சிறப்பான தேர்வு என பாஜக கருதியது. அவரை கட்சியில் இணைத்துக்கொண்டு போட்டியிட செய்யலாம் என்று பாஜக மூத்த நிர்வாகிகள் சிலர் விரும்பினர்.


இதுதொடர்பாக பாஜக-வை சேர்ந்த மூத்த நிர்வாகி ஒருவர் கவுதமியிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. ஆனால் அதற்கு கவுதமி தரப்பில் இருந்து ஆர்கேநகர் தொகுதியில் போட்டியிடுவது குறித்து அதிகாரபூர்வமான தகவல்கள் எதுவும் வரவில்லை.


இதனால் கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது பா.ஜனதாவில் இணைந்த பிரபல இசை அமைப்பாளரான கங்கை அமரனை நிறுத்த பாஜக முடிவு எடுத்துள்ளது. தேர்தலில் போட்டியிடுவதற்கு கங்கை அமரனும் இசைவு தெரிவித்தார். 


இந்த நிலையில் ஆர்கேநகர் நிலவரத்தை ஆராய்ந்த பாஜக மேலிடம், கங்கை அமரனை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. இதனை பாஜக தேர்தல் குழு செயலாளர் ஜே.பி.நட்டா டெல்லியில் நேற்று மாலை அறிவித்தார்.