கிறிஸ்துமஸ்-க்கு முன் ஆர்கே நகர் இடைத்தேர்தல்?
தேர்தல் ஆணையம், டிச.25க்கு முன் ஆர்.கே நகர் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 22-ம் ஆண்டு, முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கான தேர்தல் ரத்தானது. அதன் பின், இந்த தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு, தி.மு.க. மட்டும் அ.தி.மு.க சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். அதையடுத்து, தேர்தல் பிரசாரத்தின் போது எழுந்த பணம் பட்டுவாடா புகாரால் பேரில் தேர்தல் தடை செய்யப்படிருந்தது.
இந்நிலையில், ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய அமர்வு, வரும் டிசம்பருக்குள் தேர்தல் நடத்தப்படும்' என்று தெரிவித்திருந்தனர்.
போலி வாக்காளர்களை நீக்க கோரிய திமுக தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலை டிசம்பருக்குள் நடத்த தேர்தல் கமிஷனுக்கு, உத்தரவிட்டது.
இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன் ஆர்கே நகர் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. தேர்தல் குறித்த தேதியை முடிவு செய்ய 2 நாளில் தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி டில்லி செல்ல இருக்கிறார்..
அப்போது தலைமை தேர்தல் ஆணையருடன் நடக்கும் ஆலோசனைக்கு பிறகு, விரைவில் தேர்தல் நடக்கும் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், நாம் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ளும் இயந்திரம் தேர்தலின் போது பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.