ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட நாம் தமிழர் கட்சி சார்பாக கலைக்கோட்டுதயம் அவர்கள் இன்று வேட்புமனு பதிவு செய்தார்


வருகின்ற டிசம்பர் 21-ஆம் நாள் நடைபெறவிருக்கும் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராகப் போட்டியிடும் மாநில ஒருங்கிணைப்பாளர் கா.கலைக்கோட்டுதயம் அவர்கள் இன்று 29-11-2017 (புதன்கிழமை) 12 மணிக்கு தண்டையார்பேட்டையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னிலையில் வேட்புமனு பதிவு செய்தார்.