அனல்பறக்கும் ஆர்.கே.நகர் தேர்தலில் 3-மணி நிலவரம் 57.16% வாக்குப்பதிவு!
184 வாக்குச்சாவடிகளில் மாலை 3-மணி வரை நடை பெற்றுள்ள வாக்குப்பதிவில் 57.16% வாகுப்பதிவாகியுள்ளது.
நாடுமுழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் இன்று நடைப்பெற்று வருகிறது.
மொத்தம் 2,28,234 வாக்காளர்களை கொண்ட ஆர்.கே.நகர் தொகுதியில் மொத்தம் 258 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 4 வாக்குப்பதிவு எந்திரங்கள், மாற்று எந்திரங்கள் என மொத்தம் 1178 வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 3-மணி வரை நடை பெற்றுள்ள வாக்குப்பதிவில் 184 வாக்குச்சாவடிகளில் 3-மணி நிலவரப்படி 59.29% வாக்குகள் பதிவாகியுள்ளன.