ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்டுகின்றன. ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த 21-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இத்தேர்தலில், அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருதுகணேஷ், பாஜக சார்பில் கரு நாகராஜன், நாம்தமிழகர் கட்சி சார்பில் கலைகோட்டுதயம், சுயேச்சை வேட்பாளராக டிடிவி தினகரன் உள்ளிட்ட 59 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 


தேர்தலில் 77.5% சதவித வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு இயந்திரங்கள் சென்னை ராணி மேரி கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. மின்னணு இயந்திரங்களுக்கு வைக்கப்பட்ட சீல் இன்று காலை உடைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படுகின்றன. மொத்தம் 19-சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்காக 14 -மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. 


முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். 4 தபால் ஒட்டுகள் மட்டுமே உள்ள நிலையில் ஒருவர் மட்டுமே அதனை அனுப்பியிருப்பதாக கூறப்படுகிறது. ஆகையால் உடனடியாக மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் என தெரிகிறது. 


வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரங்களில் முன்னணி நிலவரம் தெரியவரும். பிற்பகலுக்குள் தேர்தல் முடிவு தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாக்கு எண்ணும் மையத்திற்குள் வேட்பாளர்களின் முகவர்கள், பத்திரிகையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர். 


வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ராணி மேரி கல்லூரியை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துணை ராணுவப்படையினர் உட்பட 500 காவலர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.


இதையடுத்து, வாக்குகள் எண்ணப்படுவது காலை 8 மணிக்கு தொடங்கும் என்று தெரிவித்துள்ளனர்.