#ஆர்கேநகர் இடைத்தேர்தல்: ஆதரவு கேட்டு ஜி.கே.வாசனை சந்தித்த ஓபிஎஸ்
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம். ஆர்.கே.நகர் தொகுதியில் நடக்கும் இடைத்தேர்தலில், தனது அணி வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவு கேட்பதற்காக இன்று காலை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்தார்
ஜெயலலிதா மறைவை அடுத்து, அவர் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.
இரண்டாகப் பிளவுபட்டுள்ள அ.தி.மு.க-வில், அதிமுக புரட்சிதலைவி அம்மா அணி சார்பில் மதுசூதனனும், அதிமுக அம்மா அணி சார்பில் டிடிவி தினகரனும் போட்டியிடுகின்றனர். இரு அணியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில், தனது வேட்பாளரான மதுசூதனனுக்கு ஆதரவு கேட்டு, இன்று காலை 11.15 மணி அளவில், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார் ஓ.பன்னீர் செல்வம்.