கடந்த மே மாதம் 5-ம் தேதி சென்னை பள்ளிகாரணை ஆயில் மில் பேருந்து நிலையம் அருகே மேடவாக்கம் ரங்கநாதபுரத்தை சேர்ந்த குமார்(48) என்பவரை அடையாளம் தெரியாத வாகனம் மோதி அடிபட்டு சுயநினைவின்றி கிடப்பதாக காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பின்னர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கூறி வரவழைத்த பொதுமக்கள் குமாரை பின்னர் சிகிச்சைக்காக சென்னை இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த மே மாதம் 24-ம் தேதி சிகிச்சை பலனின்றி குமார் உயிரிழந்தார்.


மேலும் படிக்க | தமிழ்நாடு அரசை பாராட்டிய அன்புமணி ராமதாஸ்


அதை தொடர்ந்து பள்ளிகாரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் 279, 337, 304 ஆகிய பிரிவீன் கீழ் வழக்கு பதிவு செய்து குமார் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். 


இந்நிலையில் நேற்று மாலை பள்ளிகாரணை காவல் நிலையம் வந்த (உர்பேசர் சமமித் கார்ப்ரேஷன்) தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பள்ளிகாரணை, கோவலன் நகர், 8வது தெருவை சேர்ந்த 24-வயதான கார்த்திக் என்பவர் சரணடைந்து நான்தான் குமாரை கொலை செய்தேன் என்று கூறியதாக கூறப்படுகிறது.


கார்த்திக் கூறியதை கேட்ட போலீசார் அவரை காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தபோது, கடந்த மே மாதம் 5ம் தேதி இருவரும் ஒன்றாக மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் கண்மூடிதனமாக அடித்து, கையால் முகத்தில் குத்தியும், காலால் மார்பில் மிதித்தும் காயப்படுத்தியது தெரியவந்தது. 


பின்னர் விபத்து ஏற்பட்டது போன்று வெங்கடேஷ் என்பவர் மூலம் 108 ஆம்புலன்ஸை வரவழைத்து, அதன் மூலம் இராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளதாகவும் தெரிவித்தார். பின்னர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரை இது விபத்து என நம்பவைத்ததாகவும் கூறி சரணடைந்தார். 


இதையடுத்து பள்ளிக்கரணை போலீசார் கார்த்திக்கை கைது செய்த போலீசார் விபத்தால் குமார் உயிரிழந்ததாக பதிவு செய்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து 302 என்ற பிரிவீன் கீழ் வழக்கு பதிவு செய்தனர். 


பின்னர் கார்த்திக்கை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


மேலும் படிக்க |அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடர்ந்து இயங்கும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR