’திருட்டு போலீஸ்’ தட்டி தூக்கிய நிஜ போலீஸ் - சிறையில் கம்பி எண்ணுகிறார்..!
போலீஸ் சீருடையில் பொதுமக்களிடம் பணத்தை பறித்த நபரை கைது செய்த காவல்துறை அவரிடமிருந்து காவல் சீருடை, போலி அடையாள அட்டை, இருசக்கர வாகனம் மற்றும் 6,000 பணம் பறிமுதல் செய்தனர்.
சென்னை வடபழனி காவல் நிலைய உதவி ஆய்வாளர் குழுவினர் வடபழனி திருநகர் 1வது தெரு மற்றும் 100 அடிசாலை சந்திப்பு அருகே கண்காணிப்பு பணியிலிருந்தபோது அங்கு Police ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் அருகில் காவல் உதவி ஆய்வாளர் சீருடையில் சந்தேகப்படும்படி ஒருவர் நின்றிருந்துள்ளார். இதையடுத்து போலீசார் அவரை விசாரணை செய்தபோது முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகத்தின்பேரில் அவரது காவல்துறை அடையாள அட்டையை வாங்கி பார்த்தபோது அது போலியானது என தெரியந்தது.
இதையடுத்து அந்த நபரை வடபழனி காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தபோது ராமாபுரம் பகுயியை சேர்ந்த அஷ்வின் (எ) அஷ்வின்ராஜ்(30) என்பது தெரியவந்தது. மேலும் இவர் காவல் உதவி ஆய்வாளர் சீருடை அணிந்து Police ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட புல்லட் இருசக்கர வாகனத்தில் வடபழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு சென்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் போலீஸ் எனக்கூறி மிரட்டி பணம் பறித்துள்ளதும் தெரியவந்தது.
பின்னர் அவர் மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறை உதவி ஆய்வாளர் சீருடை, போலி காவல்துறை அடையாள அட்டை,புல்லட் இருசக்கர வாகனம்,6,000 பணம், செல்போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட அஷ்வின் (எ) அஷ்வின்ராஜ் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் படிக்க | மீண்டும் வருகிறதா ஆன்லைன் ரம்மி... உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ