போதை விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சி வளசரவாக்கம் அடுத்த ராமாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் இணை கமிஷனர் மனோகர், திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு போதையால் ஏற்படும் தீமைகள் குறித்தும், போதை பழக்கத்தால் ஏற்படும் குற்ற சம்பவங்கள் குறித்தும் பேசினர். குறிப்பாக, போதையை ஒழிக்க தமிழக அரசும் போலீசாரும் என்னென்ன முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறித்த காணொளி காட்சி மூலம் மாணவர்கள் மத்தியில் காண்பிக்கப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கும் திட்டம் நிறைவேறுமா - நாளை உத்தரவு வெளியாகும்!


அப்போது, மாணவர்கள் மத்தியில் பல்வேறு நடிகர்களின் குரல்களில் மிமிக்கிரி செய்து ரோபோ சங்கர் அசத்தினார். கடந்த சில மாதங்களாக மிகுந்த உடல் நலக்குறைவால் இருந்து மீண்டு வந்த ரோபோ சங்கரை மாணவர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினார்கள். இதை எடுத்து அவர் மாணவர்கள் மத்தியில் பேசுகையில், " நான்கு மாதமாக உலக சூப்பர் ஸ்டாராக நான் தான் இருந்தேன் என அனைவருக்கும் தெரியும். தெரியாத்தனமா கிளிய வளர்த்துட்டேன். அது என்ன கிளின்னு தெரியாம நான் பட்ட பாடு பெரும்பாடு. ஐந்து மாதம் படுத்த படுக்கையாகி சாவின் விளிம்பிற்கு சென்று விட்டேன். 


அதற்கு காரணம் என்னிடமிருந்து சில கெட்ட பழக்கங்கள். அதற்கு அடிமையாகி விட்டேன். உங்களுக்கு முன் உதாரணமாக நான் இருக்கிறேன். தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு எல்லாம் சென்று விட்டேன். நான் எந்த சமூக வலைத்தள பக்கத்திலும் இல்லை எனக்கு செல்போனில் இரண்டு பட்டன் மட்டும் தான் தெரியும். வாட்ஸ் அப்ல பேசினா அம்புக்குறிய அமுக்குனா தான் போகும்னு எனக்கு போன வாரம் தான் எனக்கு தெரியும் என மாணவர்கள் மத்தியில் நான் பட்ட அவஸ்தைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் படி உருக்கமாக பேசினார்.


மேலும் படிக்க | செந்தில் பாலாஜி இலக்கா மாற்றம்... அரசுக்கு மீண்டும் கொடைச்சல் கொடுக்கிறாரா ஆளுநர்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ