கொரோனா நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை வழங்குவதற்கு உறுவாக்கப்பட்ட ரோபோக்கள் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சோதிக்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர் நலன் கருதித் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை வழங்க ரோபோக்களைப் பயன்படுத்துவதற்கான யோசனையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சியின் முதல்கட்டமாகத் திருச்சியில் உள்ள மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை இரண்டு ரோபோக்கள் பரிசோதிக்கப்பட்டன.


இந்நிலையில் தற்போது சென்னை ஸ்டான்லி மருத்துவமைனயில் இரண்டு ரோபோக்கல் சோதிக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.



இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுகையில்., "காலை ஸ்டான்லி மருத்துவமனைக்கு விஜயம் செய்தேன். கொரோனா வார்டுகளில் பயன்படுத்த வேண்டிய ரோபோ செவிலியர்களின் செயல்பாடுகளை சரிபார்த்து, உணவு மற்றும் மருந்து வழங்க உதவும். இது நோயாளிகளுடனான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் நேரடி தொடர்பு அளவைக் குறைக்கும், இதனால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயத்தைக் குறைக்க முடியும்" என குறிப்பிட்டுள்ளார்.


முன்னதாக, திருச்சி பொறியாளர்கள் குழுவால் உருவாக்கப்பட்ட 'Zafi' மற்றும் 'Zafi Med' ஆகிய இரண்டு ரோபோக்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் சுகாதார அதிகாரிகள் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை பரிசோதிக்கப்பட்டன.


கேமராக்கள் மற்றும் வயர்லெஸ் பேச்சு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் பொருத்தப்பட்ட இந்த ரோபோக்கள் சுகாதார அதிகாரிகளுடன் தனிமை வார்டில் நோயாளிகளுக்கு நேரடி தொடர்பு இல்லாமல் விநியோகிக்க உதவுகின்றன. மேலும் இந்த ரோபோக்களை ரிமோட் கட்டுப்பாடு மூலம் இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.