2012 ம் ஆண்டு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராயல்ஸ் சொகுசு காருக்கு நுழைவு வரி கட்ட வேண்டும் என்ற சட்டம் இருந்தது. இதற்கு வரிவிலக்கு கேட்டு அப்போது நீதிமன்றத்தை நாடி இருந்தார் விஜய். இதற்கான தீர்ப்பு சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக நீதிக்காக பாடுபடுவாதாக கூறிக்கொள்ளும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்க முடியாது. அதுமட்டுமல்லாமல், வரி செலுத்துவது என்பது நன்கொடை அல்ல நாட்டு குடிமக்கள் அனைவரது கட்டாய பங்களிப்பு என அந்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாது வரிவிலக்குக்கு தடை கேட்டதற்காக ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்திருந்தார் விஜய்.


நுழைவு வரி செலுத்த வேண்டும் என்ற உத்தரவை எதிர்க்கவில்லை. நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்கிறோம். நுழைவு வரி செலுத்த தயாராக இருக்கிறோம். ஆனால் நீதிமன்றத்தை நாடியதற்காக அபராதம் விதித்தது, மனுதாரர் குறித்து தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள விமர்சனங்களை ரத்து செய்ய வேண்டும். மனுதாரரான நடிகர் விஜய் மீது மட்டும் தேவையற்ற விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது ஏற்புடையதல்ல. எனவே அந்த கருத்துகளை நீக்க வேண்டும் என்று விஜய் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.


Also Read | நடிகர் விஜய்க்கு 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்தது மெட்ராஸ் நீதிமன்றம்


இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், நடிகர் விஜய்க்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். மேலும் ஏற்கனவே செலுத்திய நுழைவு வரி 20% போக, எஞ்சியுள்ள 80% ஒரு வாரத்துக்குள் நடிகர் விஜய் செலுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர்.


இறக்குமதி காரை பதிவு செய்ய நுழைவு வரி செலுத்தியதற்கான ரசீது, ஆட்சேபனை இல்லை என்ற சான்றிதலும் அவசியம். ஜி.எஸ்.டி சட்டத்திற்கு முன் மதிப்பு கூட்டு வரி அமலில் இருந்தது. அப்போது இறக்குமதி வரி செலுத்த வேண்டியது அவசியம். அதன்படி நடிகர் விஜய் தன் காருக்கு மொத்தம் 40 லட்சம் ரூபாய் நுழைவு வரி செலுத்தியுள்ளார். முதலில் 8 லட்சம் ரூபாயும் தற்போது 32 லட்சம் ரூபாயும் செலுத்தியுள்ளார்.


Also Read | #வரிகட்டுங்க_விஜய்: நடிகர் விஜய்யை வரி கட்ட சொல்லி ட்விட்டரில் ட்ரெண்டிங்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR