சென்னை: கோடிக்கணக்குல செலவழிச்சு காரு வாங்க முடிஞ்சது, ஆனா அதுக்கு வரி கட்ட தடை வேணுமா? ஒரு லட்சம் ரூபாய் அபராதம் கட்டு என்று நடிகர் விஜய்க்கு மெட்ராஸ் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நடிகர் விஜய், இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை இறக்குமதி செய்திருந்தார். அதற்கு வரி விதிக்க தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதை இன்று விசாரித்த நீதிமன்றம், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. அபராதத்தை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கவும் அறிவுறுத்தியது மெட்ராஸ் உயர் நீதிமன்றம்.
நடிகர் விஜயின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, சமூக நீதிக்கு பாடுபடுவதாக திரையில் பிரதிபலிக்கும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வது ஏன் என்று கேள்வி எழுப்பினார். மேலும் இந்தப் போக்கை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கண்டித்தார்.
Also Read | விஜய் படத்தை காட்டி சிறுவனுக்கு டாக்டர்கள் சிகிச்சை; வைரல் போஸ்ட்
நடிகர்கள் உண்மையான கதாநாயகர்களாக இருக்க வேண்டும்.ரீல் ஹீரோக்களாக இருக்க கூடாது என்று கூறிய நீதிமன்றம்,.வரி என்பது நன்கொடையல்ல; கட்டாய பங்களிப்பு எனவும் தெரிவித்தது.
சொகுசுக் காரை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தால் அதற்கு வரி கட்ட வேண்டும் என்று தெரியாமலா நடிகர் விஜய் கார் வாங்கினார் என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம், இதுபோன்ற சிறப்பு கோரிக்கைகளை கோருவதற்கு முன் பிரபலங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
முன்னதாக, நடிகர் விஜய் 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் சொகுசுக் காரை இறக்குமதி செய்தார். இந்த காருக்கு நுழைவு வரி செலுத்தாததால் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யவில்லை. எனவே, ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்த வணிக வரி துறை உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய்மனு தாக்கல் செய்திருந்தார். மேலும், தான் இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி விதிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.
Also Read | தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த்
காரை பதிவு செய்யாததால் அதனை பயன்படுத்த முடியவில்லை என்றும் நடிகர் விஜய் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ் எம் சுப்ரமணியம், மனுதாரர் தான் எந்த தொழில் செய்கிறார் என்பதை மனுவில் குறிப்பிட வில்லை என்றும் விஜயின் வழக்கறிஞரிடம் கேட்டார். அப்போது தான் மனுதாரர், நடிகர் என்று வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
அதைக் கேட்டதும் நீதிபதி, உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும் என்றும், வரி வருமானம் நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்வும் குறிப்பிட்டார். மேலும், வரி என்பது கட்டாயமாக வழங்க வேண்டிய பங்களிப்பு தானே தவிர, தானாக வழங்க கூடிய நன்கொடை இல்லை எனவும் கூறினார்.
மக்கள் செலுத்தக்கூடிய வரி தான், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட நல திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது என்றும் நீதிபதி விளக்கமாக தெரிவித்தார், பிறகு நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் உத்தரவிட்டார்.
Also Read | பாலிவுட்டை மிஞ்சும் கோலிவுட்... 1000 கோடி வசூலில் தமிழ் சினிமா..!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR