இந்தியா முழுவதும் ஃப்ளைட் ஆஃப் ஃபேன்டஸி எனும் நிகழ்ச்சி மூலம் ஆதரவற்ற மாணவர்களின் விமானத்தில் பறக்கும் ஆசையை ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பு நிறைவேற்றி வருகிறது. அதன் ஒரு பகுதியாக  எஸ்.ஆர்.எஸ்  சர்வோதயா பெண்கள் விடுதியில்  உள்ள 15 மாணவர்களின் கனவான விமானத்தில் பறக்கும் ஆசை இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை விமானநிலையத்தில் இருந்து இந்த 15 மாணவிகளும் விமானத்தில் கோயம்புத்தூருக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கு ஜி.டி.கார் மியூசியத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பின்னர் ரெசிடென்சி  நட்சத்திர விடுதியில் அவர்களுக்கு உயர்தர உணவு பரிமாறப்பட்டு பின்னர் ஈஷா யோகா மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். நாள் முழுவதும் உற்சாகமாக 15 மாணவிகளும் இந்த சுற்றுலாவை ரசித்துக் கொண்டாடினர். பின்னர் மீண்டும் விமானம் மூலம் சென்னை அழைத்துவரப்பட்டனர். 


மேலும் படிக்க | மற்ற மாநிலங்களைப் போல் இல்லை... தமிழ்நாட்டில் பேரணி தள்ளிவைத்த ஆர்எஸ்எஸ்


இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த நிகழ்ச்சி மேலாளர கிஷ்வர் ஜெஹான், இந்திய விமான நிலையங்கள் ஆணைய இயக்குனர் ஷரத்குமார்ஜி,  சி.ஐ.எஸ்.எஃப் கமாண்டன்ட் ஸ்ரீராம் மற்றும் ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பினருக்கு 15 மாணவிகளும் புன்னகை நிறைந்த நன்றியை தெரிவித்தனர்.


ரவுண்ட் டேபிள் இந்தியாவின் டேபிளர்ஸ், விஜயராகவேந்திரா ஏரியா தலைவர், விபுல் ஜெயின், தலைவர் ஆர்.டி.100, ஜிதேந்திரா, தலைவர் ஆர்.டி.20 மற்றும் ரவுண்ட் டேபிள் இந்தியா உறுப்பினர்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.


மேலும் படிக்க | வானிலை அறிக்கை: இந்த மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய மழை, அலர்டா இருங்க மக்களே!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ