ரௌடிஸம் + முன்பகை + கொலை! என்கவுன்ட்டர் நடந்தது ஏன்!
செங்கல்பட்டு பகுதியில் அடுத்தடுத்து நாட்டு வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் நடந்த கொலைகள் குறித்த தகவல்கள் போலீசாருக்கு அதரிச்சியை உள்ளாக்கியது.
மூன்று வருடங்களுக்கு பிறகு செங்கல்பட்டு பகுதியில் ரவுடிகள் அட்டகாசம் துவங்கி அடுத்தடுத்து இரட்டை கொலை சம்பவம் பொதுமக்களை மட்டுமின்றி காவல் நிலையம் அருகிலேயே நாட்டு வெடிகுண்டு வீசி ஒருவர் கொள்ளப்பட்டது போலீஸாரையும் சற்று அதிர்சிக்கு உள்ளாக்கியது. அடுத்தடுத்து நாட்டு வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் நடந்த கொலைகள் குறித்த தகவல்கள் போலீசாருக்கு தெரியவர மேலும் அதரிச்சியை கொடுத்தது. விரைந்து செயல்பட்ட செங்கல்பட்டு டவுன் போலீசார் கொலை செய்யப்பட்ட இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனை தொடர்ந்து தப்பியோடிய நபர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரிக்க தொடங்கினர்.
இக்கொலை வழக்கில் தொடர்புடையவர்களை பிடிப்பதற்காக செங்கல்பட்டு எஸ்பி அரவிந்தன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தேடி வந்தனர். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் ஒளிந்திருக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறையினரும் இரவு முழுவதும் தேடிவந்தனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புலிவனம் பகுதியில் பதுங்கி இருந்ததாக மாதவன் என்பவரையும் ஜெசிகா என்ற பெண்ணையும் போலீசார் முதலில் கைது செய்துள்ளனர். இந்த பெண்ணுடைய கணவர் அசோக் அந்த பகுதியில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் சில மாதங்களுக்கு முன்பு நாட்டு வெடிகுண்டுகளை பைக்கில் எடுத்து செல்லும் போது தவறி கீழே விழுந்ததில் வெடிகுண்டு வெடித்து கண்ணில் அடிபட்டது. இதனால் தற்போது அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கணவர் சிறையில் உள்ள நிலையில் நாட்டுவெடிகுண்டு தயாரிக்கும் பணிகளை ஜெசிகாவே செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் முன்பகை காரணமாக இக்கொலைகள் நடந்துள்ளதும், மேலும் கொலையில் தொடர்புடைய இருவர் செங்கல்பட்டு காட்டுப்பகுதியில் ஒளிந்து இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு சென்றபோது மறைந்திருந்த குற்றவாளிகள் தப்பிப்பதற்காக போலீசார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசத் துவங்கியுள்ளனர். இதில் இரண்டு காவல்துறையினர் காயமடைந்தை அடுத்து காவல்துறையினர் தற்காப்புக்காக நடத்திய என்கவுண்டரில் ரவுடிகள் மொய்தீன் மற்றும் தினேஷ் இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். சுட்டுக்கொல்லப்பட்ட இருவர் மீதும் ஏற்கனவே கொலை உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | கூலிப்படை வைத்து கணவனை கொலை செய்த மனைவி..! பின்னணி என்ன?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR