விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள திரௌபதியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அறிவழகன். 36 வயதான இவர் மீது விழுப்புரம், கடலூா் மாவட்டங்களில் 2006- ஆம் ஆண்டு முதல் 3 கொலை வழக்குகள், கொலை முயற்சி, நாட்டு வெடிகுண்டு வீச்சு உள்ளிட்ட 21 வழக்குகள் பதிவாகியுள்ளன. பிணையில் வெளியே வந்த அவா் 2018- ஆம் ஆண்டு முதல் தலைமறைவானார். இவா் மீது 13 வழக்குகளில் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதால், போலீசார் அவரை தேடி வந்தனா். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


இந்த நிலையில், வழிப்பறியில் ஈடுபட்டதாக அறிவழகனை கண்டமங்கலம் போலீஸாா் கடந்த மாதம் கைது செய்தனர்.



மேலும் படிக்க | ஒன்றரை வயது குழந்தைக்கு உப்மாவில் விஷம் வைத்த தாய் : தகாத உறவால் நேர்ந்த கொடூரம்..!


இதையடுத்து, விழுப்புரம் டி.எஸ்.பி. பாா்த்திபன் தலைமையிலான போலீஸாா் அறிவழகனை விழுப்புரம் இரண்டாவது நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில், நீதிபதி பூா்ணிமா முன் ஆஜா்படுத்தினா். மாா்ச் 28-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில், போலீஸ் பாதுகாப்புடன் அறிவழகன் விழுப்புரம் மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.


இந்நிலையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதாவின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவின் படி அறிவு என்கிற அறிவழகன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது சிறையில் அடைக்கப்பட்டார்.


மேலும் படிக்க | காவலரை திட்டிய கவுன்சிலரின் கணவர் எஸ்கேப் - நண்பர்கள் 2 பேர் கைது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR