நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. மாநிலம் முழுவதும் பெருவாரியான இடங்களைக் திமுக கைப்பற்றியது அக்கட்சியின் தலைமைக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், இந்த மகிழ்ச்சி வெகு நாட்களுக்கு நீடிக்கவில்லை. பதவியேற்ற கவுன்சிலர்கள் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கினர்.
அந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி திமுகவுக்கும், ஆட்சிக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சென்னையில் 51-வது வார்டு மாமன்ற உறுப்பினர் நிரஞ்சனாவின் கணவரும், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற வடசென்னை மாவட்ட செயலாளருமான ஜெகதீசன் என்பவர் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்களை தகாத வார்த்தைகளால் திட்டிய வீடியோ வெளியானது. அதில், நான்தான் கவுன்சிலர் என்று கூறி அவர் காவல்துறையை மிரட்டினார்.
இந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் ஜெகதீசன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜெகதீசன் உள்ளிட்டோர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுவை தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் காவலர்களை மிரட்டும் செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது, தற்பொழுது இவர்களுக்கு முன் ஜாமீன் வழங்கினால் இச்செயல் தொடரவே வாய்ப்புள்ளது என்று கூறி அவர்களின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால் கவுன்சிலரின் கணவர் ஜெகதீசன் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்ய முடிவெடுத்தனர். ஜெயபிரகாஷ் மற்றும் குருராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கவுன்சிலரின் கணவர் ஜெகதீசன் உள்ளிட்ட 3 பேர் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் படிக்க | ஒன்றரை வயது குழந்தைக்கு உப்மாவில் விஷம் வைத்த தாய் : தகாத உறவால் நேர்ந்த கொடூரம்..!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR