ஆர்.கே.நகரில் ரூ.100 கோடி பணபட்டுவாடா: மு.க.ஸ்டாலின்!
ஆர்.கே.நகரில் ரூ.100 கோடி வரை பணப்பட்டுவாடா நடைபெறுவதாக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தளை முன்னிட்டு அதிகாரி பத்ரா தலைமையில் பல்வேறு அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் அ.தி.மு.க., தி.மு.க., பாஜக உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.
அந்த கூட்டத்தில் முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின்:- இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஆர்.கே. நகர் தொகுதியில் ரூ.100 கோடி வரை பணப்பட்டுவாடா நடந்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தும் அவர்கள் கண்டும் காணாமல் இருக்கின்றனர். ஆளும்கட்சிக்கு தேர்தல் அதிகாரிகளும், காவல் துறையும் திட்டமிட்டு உடந்தையாக உள்ளனர்.
புகார் கூறுவதன் மூலம் ஆர்.கே.நகர் தேர்தலை நிறுத்த வேண்டும் என அதிகாரிகளிடம் தி.மு.க. முறையிடவில்லை. பணப்பட்டுவாடா உள்ளிட்ட முறைகேடுகளைக் களைய வேண்டும் என்பதே தி.மு.க.வின் நோக்கம். என்று தெரிவித்தார்.