தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரூ.1,035 கோடி மதிப்பீட்டில் 92 துணை மின் நிலையங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை: சென்னை: 92 துணை மின் நிலையங்களை இன்று முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்துள்ளார். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரூ.1,035 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள 92 துணை மின் நிலையங்களை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்துள்ளார். தருமபுரி மாவட்டம் - மொரப்பூரில் 12 கோடியே 23 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 110/11 கி.வோ. துணை மின் நிலையம். தூத்துக்குடி மாவட்டம் - தென்னம்பட்டியில் 418 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஒரு 400/230-110 கிலோ வாட்ஸ் துணை மின் நிலையத்தை முதல்வர் திறந்து வைத்துள்ளார்.


மேலும் கிருஷ்ணகிரி மாவட்டம் - உத்தனப்பள்ளியில் 168 கோடியே 6 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஒரு 230/110 கி.வோ. துணை மின் நிலையம். திண்டுக்கல் மாவட்டம் - நல்லமன்னர் கோட்டை, ஈரோடு மாவட்டம் - தண்ணீர் பந்தல், தஞ்சாவூர் மாவட்டம் - முள்ளுக்குடி ஆகிய இடங்களில் 30 கோடியே 91 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மூன்று 110/33 கி.வோ. துணை மின் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது.


இதனை அடுத்து கடலூர் மாவட்டம் - குறிஞ்சிப்பாடி மற்றும் கோரணப்பட்டு, திண்டுக்கல் மாவட்டம் - சித்தர்கள்நத்தம், ஈரோடு மாவட்டம் - காவிலிபாளையம், கன்னியாகுமரி மாவட்டம் - தெங்கம்புதூர், மதுரை மாவட்டம் - மாணிக்கம்பட்டி, சேலம் மாவட்டம் - மேச்சேரி, சிவகங்கை மாவட்டம் - ஹ. தெக்கூர், தஞ்சாவூர் மாவட்டம் - ஊரணிபுரம் மற்றும் பட்டுக்கோட்டை நகரியம், திருவள்ளூர் மாவட்டம் - பூணிமாங்காடு, திருநெல்வேலி மாவட்டம் - வீரவநல்லூர், திருப்பூர் மாவட்டம் - இட்சிப்பட்டி மற்றும் பெருமாநல்லூர், திருச்சிராப்பள்ளி மாவட்டம் - பெட்டவாய்தலை ஆகிய இடங்களில் 41 கோடியே 51 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பதினைந்து 110/33 கி.வோ. துணை மின் நிலையங்களை முதல்வர் திறந்து வைத்தார்.


தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொலி காட்சி மூலம் இவற்றை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.  பாசன வேளாண்மையை நவீனப்படுத்தும் வகையில், 1 கோடியே 47 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்ட 18 வாகனங்களை, பொறியாளர்களிடம் முதலமைச்சர் வழங்கினார். 


சென்னையை அடுத்த வண்டலூரில், 91 கோடியே 80 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பல்வழி பரிமாற்ற மேம்பாலம் உட்பட 11 மாவட்டங்களில், சுமார் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒரு இரண்டடுக்கும் மேம்பாலம் மற்றும் 15 ஆற்றுப் பாலங்களை, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.