இராணுவ வீரர் சுரேஷ் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி: ஈ.பி.எஸ்!
பாக்., தாக்குதலில் மரணமடைந்த வீரர் சுரேஷ் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார்.
எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு உயிரிழந்த சுரேஷின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில்:- ஜம்மு-காஷ்மீர் ஆர்.எஸ்.புரா பகுதியில் இந்திய நாட்டின் எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சுரேஷ், எதிரிகளின் தாக்குதலால் வீரமரணம் அடைந்தார்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த எல்லைப் பாதுகாப்புப் படை தலைமைக் காவலர் சுரேஷின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று தனது அறிவிப்பில் முதல்வர் தெரிவித்துள்ளார்.