இம்மாத இறுதிக்குள் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2000 வழங்கப்படும்: முதல்வர்
ஏழைகளுக்கான உதவித்தொகை ரூபாய் 2,000 இம்மாத இறுதிக்குள் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்தார்.
தமிழக சட்டபேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்பொழுது தேர்தலைக் கருத்தில் கொண்டு தான் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் கொடுக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது என எதிர்கட்சி கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியது, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும் எனக் கூறப்பட்டது தேர்தலை கருத்தில் கொண்டு கூறப்பட்டது அல்ல. ஏழை குடும்பங்களின் மீது தமிழக அரசு கொண்ட அக்கறையினால் இரண்டாயிரம் ரூபாய் அறிவிப்பை அரசு அறிவித்தது எனக் கூறினார்.
தமிழ்நாடு முழுவதும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு இரண்டாயிரம் ரூபாய் இம்மாதம் இறுதிக்குள் வழங்கப்படும். இந்த தொகை நேரடியாக அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் எனவும் கூறினார்.