நீலகிரி மலை ரயில் மூலம் கடந்தாண்டில் ரூ.26 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே இணைய அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்களவையில் இன்று பேசிய ரயில்வே துறையின் மத்திய இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா, தமிழகத்தில் இயக்கப்பட்டு வரும் நீலகிரி மலை ரயிலால் 2017-18 ஆண்டில் ரூ.28 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. வெறும் ரூ.1..82 கோடி மட்டுமே வருவாய் கிட்டியுள்ளது என குறிப்பிட்டார்.


இதேபோன்று கடந்த 2016-17 ஆண்டில் ரூ.26.74 கோடி செலவு ஏற்பட்டுள்ளது.  அதேவேலையில் ரூ.1.99 கோடி மட்டுமே வருவாய் கிடைத்துள்ளது.


இந்திய ரயில்வே துறைக்க இந்த ரயிலால் இழப்பு ஏற்பட்டபொழுதிலும், பாரம்பரிய ரயில் சேவையின் வருவாய் இழப்புக்கு ஈடு செய்யும் வகையில் எந்த திட்டமும் இல்லை என மனோஜ் சின்ஹா தொரிவித்துள்ளார்.


யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய தலம் என அறிவிக்கப்பட்டுள்ள நீலகிரி மலை ரயிலின் சேவையினை நிறுத்துவது என்பது இயலாத காரியம். இதன் காரணமாகவே இப்பகுதியில் சுற்றுலாவாசிகளுக்காக நீலகிரி மலை ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்!