நெல்லை: தமிழக அரசு சார்பில் மறைந்த முன்னால் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவானது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையினில் இன்று நெல்லையில் பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. விழாவில் முதல்வர் பழனிசாமி துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் பழனிசாமி அவர்கள் நிகழ்ச்சியில் பேசியதாவது;


"தமிழகத்தின் பல்வேறு ஆறுகளில் தடுப்பணைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் ரூ.300 கோடி செலவில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. தடுப்பணைகளில் சேமிக்கப்படும் நீர் விவசாயம், குடிநீர் தேவைகளுக்கு பயன்படுத்தப்படும்" என தெரிவித்தார். மேலும் குறை கூறுவோர் கூறிக்கொண்டுதான் இருப்பார்கள்; அதிலும் திமுக அதிகமாகவே குறை கூறுகின்றது." எனவும் தெரிவித்தார்!