திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அடுத்த சேடர்பாளையத்தை சேர்ந்தவர் திருமூர்த்தி. இவர் அதே பகுதியில் வேஸ்ட் குடோன் வைத்து நடத்தி வருகிறார். இங்கு ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இன்று முழு ஊரடங்கு (Full Lockdown) என்பதால் நேற்று இரவு வேலையை முடித்துவிட்டு தொழிலாளர்கள் குடோனை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ALSO READ | திரைப்பட பாணியில் புல்லட் திருட்டு; டெஸ்ட் டிரைவ் செய்த காதல் ஜோடிகள் மாயம்!


இந்த நிலையில் நள்ளிரவு 1 மணி அளவில் குடோனில் இருந்து கரும்புகை கிளம்பியுள்ளது. சற்று நேரத்தில் குடோன் முழுவதும் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இதனைப் பார்த்து அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக குடோன் உரிமையாளர் திருமூர்த்திக்கும், திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கும் (Fire service station) தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் 3 வாகனங்களில் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 



குடோன் முழுவதும் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் இரவு 1 மணி முதல் இன்று அதிகாலை  வரை தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த ரூ.50 லட்சத்திற்கும் மேலான வேஸ்ட் துணிகள் எரிந்து நாசமானது. ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


 



ALSO READ | தமிழகத்தில் வார இறுதி ஊரடங்கு! இந்த சேவைகள் உண்டு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR