ஆர்எஸ் பாரதியின் கடுகடு பேச்சு, 2 திமுக எம்எல்ஏக்கள் மேடையிலேயே அப்செட்
RS Bharathi Latest Speech : திமுக வெற்றிக்காக உழைத்தவர்களை எம்எல்ஏ ஆன பிறகு சிலர் மதிப்பதில்லை என ஆர்எஸ் பாரதி பேச, அந்த மேடையில் இருந்த 2 திமுக எம்எல்ஏக்கள் அப்செட்டானார்கள்.
RS Bharathi Latest Speech Tamil : சென்னை ராயபுரத்தில் அமைந்துள்ள அறிவகத்தில் திமுக கட்சியின் பொது உறுப்பினர்கள் கூட்டமானது நடைபெற்றது. இதில் திமுக கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி கலந்து கொண்டு பேசினார். மேடையில் பேசிய அவர், திமுக கட்சி பொருத்தவரை ஆலோசித்து பின்னர் முடிவெடுக்கக்கூடிய கட்சியாக அண்ணா காலத்திலேயே இருந்ததாகவும், தற்போதும் அது இருக்க வேண்டும் என்று பேசினார். அந்த காலத்தில் நிர்வாகிகளோடு பேசுவதற்கு கட்சிகென சொந்த இடம் இல்லாததால், இரவு 10 மணிக்கு மேல் மெரினா கடற்கரையில் அண்ணா நிர்வாகிகளை அழைத்து பேசுவார் எனவும், அதற்காகத்தான் அந்த இடத்தில் அண்ணாவிற்கு கலைஞர் சமாதி கட்டினார் எனவும் பேசினார்.
தொடர்ந்து ஆர்எஸ் பாரதி பேசும்போது, " எந்தவொரு முடிவையும் ஆலோசித்து முடிவெடுக்கக்கூடிய கட்சியாக அண்ணா காலத்தில் இருந்தே திமுக இருந்தது. இப்போதும் அது இருக்க வேண்டும். அந்த காலத்தில் கட்சி நிர்வாகிகளோடு பேசுவதற்கு இடம் இல்லை. இரவு 10 மணிக்கு மேல் மெரீனா கடற்கரையில் அமர்ந்து நிர்வாகிகளை அழைத்து பேசுவார். அதற்காக தான் அண்ணாவுக்கு கலைஞர் அந்த இடத்தில் சமாதி கட்டினார்." என்றார். மேலும், திமுக கட்சியின் உட்கட்ட அமைப்புகளை அறிந்து கொள்வதற்காக ஆந்திராவிலிருந்து கட்சி பிரமுகர்கள் எல்லாம் தம்மை வந்து அறிவாலயத்தில் சந்திப்பதாகவும் பேசிய ஆர்எஸ் பாரதி, கலைஞர் உடனடியாக ஒரு முடிவை எடுத்து உடனடியாக அந்த முடிவை செயல்படுத்துபவர் என கூறினார்.
இப்போது அதை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்து வருவதால், உதயநிதியின் உருவத்தில் தாம் கலைஞரை பார்ப்பதாகவும் ஆர்எஸ் பாரதி நெகிழ்ச்சியாக பேசினார். அதனைத் தொடர்ந்து உட்கட்சி விவகாரம் குறித்தும் ஒருசில வார்த்தைகள் பேசினார். எம்எல்ஏக்கள் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால் தங்களின் வெற்றிக்காக பாடுபட்டு உழைத்த கட்சியினரை நிர்வாகிகளை கண்டு கொள்வதில்லை எனவும், இப்படி கண்டுகொள்ளாமல் இருந்தால் அந்த நிர்வாகியின் குடும்பம் தங்களுக்கு எதிராக மாறும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என பேசினார்.
"கலைஞர் ஒரு விஷயத்தை உடனே முடிவெடுத்து செய்வார். இப்போது அதனை உதயநிதியிடம் பார்க்கிறேன். கலைஞர் உருவத்தில் உதயநிதியை பார்க்கிறேன். எம்எல்ஏக்கள் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால் கட்சி நிர்வாகிகளை மதிப்பத்தில்லை. இப்படி இருந்தால் கட்சியின் குடும்பத்தினரே அவர்களை மதிக்கமாட்டார்கள் என்பதையும் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்"
அவர் இப்படி பேசும்போது மேடையில் இருந்த பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் சேகர், ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி ஆகியோர் மேடையில் இருந்தனர். அவர்களை மனதில் வைத்து தான் ஆர்எஸ் பாரதி இப்படி பேசுகிறார் என கூட்டத்தில் இருந்தவர்களே முனுமுனுத்தனர். ஆர்எஸ் பார்தியின் பேச்சைக் கேட்டு அவர்கள் இருவரும் அப்செட்டும் ஆனார்கள்.
மேலும் படிக்க | கரூர் விஜய் கட்சி தவெக நிர்வாகி அதிரடி கைது, பள்ளி ஆசிரியை பெயரில் கார் வாங்கி மோசடி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ