தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து மதிமுக சார்பினில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெறயுள்ளது. இதைக்குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கூறியதாவது:-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக மீனவர்களின் கைபற்றப்படும் படகுகளுக்கு பெரும் தொகை அபராதம் விதிக்கப்படும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதை கண்டித்து வரும் 16-ம் தேதி இராமேஸ்வரம் கடற் கரையில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த விசயத்தில் இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தம் தர வேண்டும். தமிழக மீனவர்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  


மேலும் அவர் ஜெயலலிதா பற்றி கூறுகையில்:- மருத்துவமனையில் முறைப்படி முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து மருத்துமனை சார்பில் அளிக்கப்பட்ட விளக்கங்கள் பல்வேறு பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் தொடர்ந்து வெளியாகின. இந்நிலையில் அவரின் மரணம் குறித்து வதந்திகளை பரப்பி வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த வதந்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு பதில் சொல்ல நான் விரும்பவில்லை. ஆனால் சில கட்சிகள் இதைக்குறித்து விஷம பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்றார்.