Tamil Nadu Agriculture Budget 2021: தமிழக சட்டப் பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லாத நிதிநிலை அறிக்கை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண் துறைக்கான தனியாக நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் (MRK Panneerselvam) தாக்கல் செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்காக வேளாண் பட்ஜெட்டை காணிக்கையாக்குகிறேன் எனக்கூறி அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கள் செய்தார்.  273 பக்கங்கள் கொண்ட வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் பல்வேறு திட்டங்கள் குறித்து பேசினார்.


அதில் வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், காய்கறி, பழம் பயிரிட்டு நிகர சாகுபடி பரப்பு 75% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


மரபுசார் விதை நெல் உருவாக்கும் திட்டத்திற்கு ரூ.25 லட்சம்,  மருத்துவ குணம் கொண்ட மூலிகைச் செடிகள் கொண்ட தழைகள் 2 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படும் எனவும்,  வைட்டமின் சி பெட்டகம் என அழைக்கப்படும் நெல்லி 200 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


ALSO READ | TN Agri Budget 2021: தமிழக வேளாண் பட்ஜெட் முக்கிய அம்சங்கள்


படித்த இளைஞர்கள் சொந்த ஊரிலேயே வேளாண்மையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல "ஊரக இளைஞர் வேளாண் திறன் மேம்பாட்டு இயக்கம்" தொடங்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பும் வெளியிட்டார். அதில் முதற்கட்டமாக 2,500 இளைஞர்களுக்கு வேளாண் பயிற்சிகள் அளிக்கப்படும். இதற்காக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அறிவித்தார். 


மேலும், கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. 2020-2021 நிதியாண்டில் ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கான ஊக்கத்தொகைக்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ.42.50 வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


 



நேற்று பொது பட்ஜெட் தாக்கல் செய்த போது நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் (PTR Palaivel Thiagarajan) மூன்று மணி நேரம் தொடர்ந்து உரையாற்றினார். தொல்லியல் துறை, நீதித்துறை,  பேரிடர் மேலாண்மை துறை, தமிழக வளர்ச்சி துறை, காவல்துறை, மீன்வளத்துறை உயர்கல்வித்துறை, நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்து துறை, பள்ளிக்கல்வித்துறை, சாலை பாதுகாப்பு, ஸ்மார்ட் சிட்டி, குடும்ப நலத்துறை, மருத்துவ காப்பீடு, அமைப்பு சாரா தொழிலாளர் நலன், ஆதிதிராவிடர் நலத்துறை, விளையாட்டுத்துறை என அனைத்து துறைகளுக்கும் நீதி ஒதுக்கிடு செய்தார்.


ALSO READ | விவசாயிகளை பெருமைப்படுத்தவே வேளாண் துறை - உழவர் நலத்துறை எனப் பெயர் மாற்றம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR