பத்திரிக்கையாளர் விவகாரத்தில் மன்னிப்பு கோரினார் SV சேகர்!
அதிகாரிகளுடைய ஆசைக்கு இணங்காமல் பெரிய பத்திரிக்கையாளர் ஆகமுடியாது என பாஜக உறுப்பினர் SV சேகர் அவர்கள் பதிவிட்டது பெரும் சர்சையினை ஏற்படுத்தியுள்ளது!
பெண் பத்திரிக்கையாளர் கன்னத்தை தடவியதாக ஆளுநர் பன்வாரிலால் மீது விமர்சணங்கள் வைக்கப்பட்ட நிலையில் அவர் தனது பதவியினை ராஜினாமா செய்ய வேண்டும் என தமிழகம் முழுவதும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் ஆளுநருக்கு ஆதரவாக நடிகர் SV சேகர் அவர்கள் தனது முகப்புத்தகத்தில் அவரது கருத்தினை பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவில் "அதிகாரிகளுடைய ஆசைக்கு இணங்காமல் பெரிய பத்திரிக்கையாளர் ஆகமுடியாது" என பத்திரிக்கை துறையினை அவமதிப்பதாய் குறிப்பிட்டு இருந்தார். இந்த பதிவிற்கு பலரும் விமர்சனங்கள் வைத்த நிலையில் அந்த பதிவினை உடனடியாக தனது பக்கத்தில் இருந்து நீக்கினார், எனினும் அந்த பதிவின் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து தங்களது எதிர்ப்பினை மக்கள் பகிர்ந்துவருகின்றனர்.
இந்நிலையில் தற்போது, தன்னை அறியாமல் இந்த பதிவினை பகிர்ந்ததாகவும், எனவே உடனடியாக அதனை நீக்கிவிட்டதாகவும், தனது பதிவிற்கு தன்னை மன்னித்து விடுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
முன்னதாக சில தினங்களுக்கு முன்னர் பாஜக உறுப்பினர் எச்.ராஜா அவர்கள், கனிமொழியின் கருத்திற்கு சர்சைக்குறிய கருத்தினை பதிவுசெய்தார் இதனையடுத்து தற்போது SV சேகர் அவர்கள் இவ்வாறு தெரிவித்திருப்பது பெரும் சர்சையினை ஏற்படுத்தியுள்ளது!