மின் அழுத்த கம்பியில் சிக்கி 8 கறவை மாடுகள் உயிரிழப்பு: புதுச்சேரியில் பரிதாபம்
மின் கம்பியில் சிக்கி 8 கறவை மாடுகள் உயிரிழந்துள்ளதால் இப்பகுதி மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் லம்பர்ட் சரவணன் நகரை சேர்ந்தவர் சம்பத். இவர் பத்துக்கும் மேற்பட்ட மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருகின்றார்.
நேற்று இரவு மேய்ச்சலுக்காக எட்டு கறவை மாடுகளை ஓட்டி சென்றுள்ளார். மேய்ச்சல் முடிந்து இரவு 7 மணியளவில் வீட்டிற்கு வரும்பொழுது, புதுச்சேரியிலிருந்து புதிதாக அமைக்கப்பட உள்ள பைபாஸ் சாலையில் முட்புதர்கள் மண்டி கிடக்கும் பகுதியில் உள்ள உயர் அழுத்த மின் கம்பிகள் தாழ்வான நிலையில் அறுந்து கிடந்த உள்ளன.
இந்த வழியே சென்ற 8 கறவை மாடுகளும் (Cows) மின்னழுத்த உயர் கம்பியில் பட்டு மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. இதுகுறித்து தகவலறிந்த மாடுகளின் உரிமையாளர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாடுகளை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
ALSO READ | கோவையில் பயங்கரம்! பெண் மீது ஆசிட் வீச்சு..!
இதுகுறித்து முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் மாடுகள் இறப்பு குறித்து முதலியார்பேட்டை போலீசார் (Police) விசாரணை செய்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக உயர்மின் அழுத்தக் கம்பி தாழ்ந்த நிலையில் விழுந்து கிடந்தது. பலமுறை மின் துறைக்கு தகவல் கொடுத்தும் அதை சரி செய்ய வில்லை. தற்போது அந்த மின் கம்பியில் சிக்கி 8 கறவை மாடுகள் உயிரிழந்துள்ளதால் இப்பகுதி மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ALSO READ | கூலிப்படை வைத்து கணவனை கொலை செய்த மனைவி..! பின்னணி என்ன?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR