ரயில் நிலைய கொள்ளை சம்பவத்தில் சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட்: டகால்டி வேலை செய்த டிக்காராம்

ரயில் நிலையத்தில் துப்பாக்கி முனையில் பணம் கொள்ளை போனதாக நாடகமாடிய ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. 

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 4, 2022, 12:00 PM IST
  • அதிகாலையில் நடந்த அதிரடி கொள்ளை சம்பவம் குறித்து நேற்று சென்னை நகரமே பரபரப்பாக பேசியது.
  • திருடர்களிடம் மாட்டிக்கொண்ட ஊழியர் டிக்காராம் மீது மக்கள் பரிதாபப்பட்டனர்.
  • பக்காவாக திட்டமிட்டு நாடகமாடிய டிக்காராம் மற்றும் அவரது மனைவியை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
ரயில் நிலைய கொள்ளை சம்பவத்தில் சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட்: டகால்டி வேலை செய்த டிக்காராம்  title=

‘டிக்கெட் கவுண்டரில் துணிகர கொள்ளை’, ‘பறக்கும் ரயில் நிலையத்தில் திருடர்களின் கைவரிசை’, ‘ஊழியரை கட்டிப்போட்டு துப்பாகி முனையில் கொள்ளை’...என தலைப்புச்செய்திகளை ஆட்கொண்டது ரயில் நிலையத்தில் நடந்த கொள்ளைச்சம்பவம். அதிகாலையில் நடந்த அதிரடி கொள்ளை சம்பவம் குறித்து நேற்று சென்னை நகரமே பரபரப்பாக பேசியது. தனியாக பணியில் இருந்து திருடர்களிடம் மாட்டிக்கொண்ட ஊழியர் டிக்காராம் மீது மக்கள் பரிதாபப்பட்டனர். 

ஆனால், பக்காவாக பிளான் செய்து டிக்கெட் பணத்தை உஷார் செய்தது, டிக்காராம் சொன்னது போல், 3 பேர் கொண்ட மர்ம கும்பல் அல்ல, ‘கட்டிப்போட்டு கொள்ளை அடிச்சாங்க...’ என கதறிய டிக்காராமேதான் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. 

நடந்தது என்ன?
சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் டிக்கெட் விற்பனை செய்யும் நபரை கட்டிப்போட்டு பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்திய நிலையில் வேலியே பயிரை மேய்ந்த கதையாக திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் முன்பதிவு பயணசீட்டு விற்பனை செய்யும் ஊழியராக பணியாற்றும் டிக்காராமே 1 லட்சத்து 35 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை கொள்ளையடித்து விட்டு நாடாகமாடியது போலீசாரின் (TN Police) விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

சம்பவம் நடந்த  டிக்கெட் கவுண்டர் மற்றும் ரயில் நிலைய வளாகத்தில் கண்காணிப்பு கேமரா இல்லாததால் விசாரணையில் சற்று பின்னடைவு ஏற்பட்டது. டிக்கராமிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கொள்ளையர்கள் மூவரும் தமிழில் பேசியதாக தெரிவித்ததாகவும் கூறப்பட்டது. 

ALSO READ | வாகன நிறுத்தம் இல்லாத மண்டபம், திரையங்கை செயல்படவிடமாட்டேன் - துரைமுருகன்

இதனைத் தொடர்ந்து எழும்பூர் ரயில்வே டிஎஸ்பி ஸ்ரீகாந்த் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணையில் ஈடுபட்ட தனிப்படை போலீசார் ரயில் நிலையத்தின் அருகில் இருந்த CCTV காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தபோது பெண் ஒருவர் ரயில் நிலையத்திற்கு வந்து சென்றது தெரியவந்தது. 

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ரயில் நிலையத்திற்கு வந்தது டிக்காராமின் மனைவி என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து டிக்காராம் தம்பதியினரிடம் நடத்திய விசாரணையில், டிக்காராம் ஆன்லைன் சூதாட்டத்தில் பெருமளவு பணத்தை இழந்து விட்டது பற்றி போலீசார் அறிந்தனர்.

தான் வாங்கிய கடனை திருப்பி செலுத்த அவர் இந்த திட்டத்தை தீட்டியதை போலீசார் விசாரணையில் கண்டறிந்தனர். 

ரயில்வே கட்டணம் 1 லட்சத்து 35 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை திருடிவிட்டு, டிக்காராமின் மனைவி அவரை கட்டிபோட்டுவிட்டு கதவுகளையும் பூட்டிவிட்டு சென்றதை போலீசார் கண்டுபிடித்தனர். ரயில் நிலையத்தில் CCTV இல்லாததை இருவரும் நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி இந்த கொள்ளை (Robbery) சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். 

பக்காவாக திட்டமிட்டு சொந்த கடனை திருப்பிச்செலுத்த, ரயில்வே கட்டண பணத்தை திருடிவிட்டு, கொள்ளையர்கள் எடுத்துச்சென்றதாக நாடகமாடிய டிக்காராம் மற்றும் அவரது மனைவியை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

ALSO READ | சென்னையில் மாஸ்க் அபராதம்; ஒரே நாளில் ரூ.2 லட்சம் வசூல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News