அடிப்படையில் விரதம் என்பது உணவின் மீதான பற்றை தற்காலிகமாக கைவிடுதல். காரணம் ஒரு மனிதனின் வாழ்வாதாரத்தின் மிக முக்கிய அங்கமாக இருப்பது உணவு. நம் புராணங்களில், இலக்கியங்களில் பல்வேறு விதமான விரதம் குறித்த குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சஷ்டி விரதம், நவராத்திரி விரதம், மகா சிவராத்திரி விரதம், ஏகாதசி விரதம் என ஏராளமான விரத முறைகள் உண்டு. ஒவ்வொரு விரதத்திற்கும் ஒவ்வொரு குணநலன்களும், பலன்களும் உண்டு. நம்முடைய ஒவ்வொரு செயலுக்கும் நோக்கம் என்பது கட்டாயம் இருக்கும். அந்த வகையில் ஒருவர் விரதம் மேற்கொள்வதன் நோக்கம் எதுவாகவும் இருக்கலாம். ஆன்மீகம், ஆரோக்கியம் என எந்த நோக்கத்தோடு ஒருவர் விரதம் அனுசரித்தாலும், இறுதியில் அது அந்த குறிப்பிட்ட நபரின் நல் வாழ்வை மேம்படுத்துவது தான் விரதத்தின் சிறப்பு. 


அந்த வகையில் ஆன்மீக பாதையில் விரதம் இருப்பதால், தெய்வீகத்தின் தீவிரத்தை சற்று நெருக்கமாக உணர முடியும். ஆன்மீக ரீதியான சாதனாக்கள் செய்கிற போது அதற்கு ஒத்துழைக்கும் விதமாக மனமும், உடலும் சமநிலை அடைகிறது. உணவு உட்கொள்ளும் முறை குறித்து சத்குரு அவர்கள் கூறும் போது கூட, யோக முறையில் ஒரு உணவுக்கும் மற்றொரு உணவுக்குமான இடைவெளி குறைந்தது 8 மணி நேரம் இருக்க வேண்டும் என்கிறார். 


மேலும் அவர் “வயிறு காலியாக இருக்கும் போது உணவை ஜீரணித்து வெளியேற்றும் மண்டலம் சிறப்பாக வேலை செய்கிறது. அதுமட்டுமின்றி ஒருவர் ஒருபோதும் கட்டாயமாக, இந்த விரதத்தை மேற்கொள்ளாமல் இருப்பது அவசியம். உடலின் இயற்கையான சுழற்சியோடு ஒன்றி இந்த விரதத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இதை தான் நாம் மண்டலம் என்று அழைக்கிறோம். ஒரு செயல்முறையை 40 இல் இருந்து 48 நாட்கள் தொடர்ந்து செய்கிற போது நம் உடல் குறிப்பிட்ட செயல்முறைக்கு உட்படுத்தப்படும். 


மேலும் படிக்க | விபூதியை உடலில் எங்கெல்லாம் பூசி கொள்ளலாம்? அதன் மகத்துவம் என்ன?


இந்த சுழற்சி தொடரும் போது உடலுக்கு எப்போது உணவு தேவை என்கிற விழிப்புணர்வு கிடைக்கும். அதற்கு உணவு தேவைப்படாத போது நீங்கள் வெகு இயல்பாக விரதத்தை மேற்கொள்ள முடியும். அதோடு வயிறு காலியாக இருப்பதற்கும் பசியோடு இருப்பதற்கும் வித்தியாசம் உண்டு. பசியோடு விரதம் இருந்தால் உங்கள் ஆற்றல் பலவீனமடையும். அதுவே உங்கள் வயிறு காலியாக இருந்தால் உங்கள் உடலும் மனமும் அதன் உட்சபட்ச திறனில் வேலை செய்யும்” என்கிறார். 


இதனால் தான் சிவாங்கா சாதனாவில் இருக்கும் சாதகர்கள், இரு வேளை உணவு மட்டுமே உண்ண அறிவுருத்தப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக முதல் வேளை உணவு நண்பகல் 12 மணிக்கு மேல் உண்ண அறிவுருத்தப்பட்டுள்ளது. 


அதன்படி விரதமிருந்து சிவாங்கா சாதனா மேற்கொள்ளும் சாதகர்கள் பலர், தற்போது ஆதியோகி ரத யாத்திரையில் பங்கேற்றுள்ளனர். அவர்களோடு ஏராளமான தொண்டர்கள், பக்தர்கள், பொதுமக்கள் என பலரும் ஆதியோகி ரத யாத்திரையில் பங்கெடுத்துள்ளனர். வரும் மகாசிவராத்திரியை முன்னிட்டு, 5 ஆதியோகி ரதங்கள் கடந்த டிசம்பர்17 அன்று கோவை ஈஷா யோக மையத்தில் இருந்து புறப்பட்டு தமிழகமெங்கும் வலம் வந்து வரும் பிப்ரவரி 17 அன்று ஈஷா யோக மையம் வந்து சேர உள்ளன.


மேலும் படிக்க | பொருளாதார பலம் இல்லாமல் நாட்டில் எதையும் பாதுகாக்க முடியாது: ஈஷா குடியரசு தின விழாவில் சத்குரு உரை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ