ஈஷா ‘இன்சைட்’ நிகழ்ச்சியில் ஜல் சக்தி அமைச்சர்! நீர் வளத் துறை முதலீடு பற்றி தகவல்

Jal Sakthi Investment: நீர் வளத் துறையில் 5 ஆண்டுகளில் 210 பில்லியன் டாலர்கள் முதலீடு! ஈஷா ‘இன்சைட்’ நிகழ்ச்சியில் ஜல் சக்தி அமைச்சர் தகவல்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 28, 2022, 08:24 PM IST
  • நீர் வளத் துறையில் 5 ஆண்டுகளில் 210 பில்லியன் டாலர்கள் முதலீடு
  • ஈஷா ‘இன்சைட்’ நிகழ்ச்சியில் ஜல் சக்தி அமைச்சர் தகவல்
  • நீர் வளத் துறையில் அதிக முதலீட்டை ஈர்க்கும் இந்தியா
ஈஷா ‘இன்சைட்’ நிகழ்ச்சியில் ஜல் சக்தி அமைச்சர்! நீர் வளத் துறை முதலீடு பற்றி தகவல் title=

கோவை: “ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் வரும் 2024-ம் ஆண்டிற்குள் பாதுகாப்பான குடிநீரை குழாய்கள் மூலம் வழங்க திட்டமிட்டுள்ளோம்” என ஈஷா ‘இன்சைட்’ நிகழ்ச்சியில் மத்திய ஜல் சக்தி அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் கூறினார். வர்த்தக தலைவர்களின் தலைமை பண்பை மேம்படுத்துவதற்காக ஈஷா ‘இன்சைட்’ என்ற 4 நாள் நிகழ்ச்சி கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஜல் சக்தி துறை அமைச்சர் ஜல் ஜீவன் திட்டம் குறித்த பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

குறிப்பாக, “ஜல் ஜீவன் திட்டத்தின் கணக்கீட்டின்படி, 2019-ம் ஆண்டு 16 சதவீதம் இந்தியர்களின் வீடுகளில் மட்டுமே குழாய் குடிநீர் வசதி இருந்தது. ஆனால், தற்போது அந்த அளவு 54 சதவீதமாக அதிகரித்துள்ளது. வரும் 2024-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் குடிநீர் வசதியை ஏற்படுத்த செயல்கள் செய்து வருகிறோம். இதற்காக 2019-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை இந்திய நீர் வளத் துறையில் 210 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.” என்று மத்திய அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் கூறினார்.

மேலும், “கிராமப்புறங்களில் குடிநீரின் தரத்தை உறுதி செய்வதற்காக கிராம வாரியாக தனி குழுக்களை உருவாக்கி உள்ளோம். இதில் கிராமப்புற பெண்களுக்கும் பயிற்சி அளித்துள்ளோம். அவர்கள் ஒரு கையடக்க கருவியின் மூலம் 12 காரணிகளை கொண்டு நீரின் தரத்தை ஆய்வு செய்து ஆன்லைனில் பதிவேற்றுவார்கள். இதன் மூலம் நீரின் தரம் உறுதி செய்யப்படும்” என்றார்.

நவம்பர் 24 முதல் நவம்பர் 27 வரை நடைபெற்ற ஈஷா அமைப்பின் இந்நிகழ்ச்சியில் சத்குருவின் சிறப்புரைகள், சத்சங்கம் மற்றும் தியான நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அத்துடன் பல்வேறு முன்னனி வர்த்தக தலைவர்கள் பங்கேற்று வர்த்தகம் மற்றும் தலைமைப் பண்பு தொடர்பாக ஆலோசனைகள் வழங்கினார்கள்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பேச்சாளர்களில் ஒருவரான  ஹிமாலயன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆல்டர்நேட்டிவ்ஸ் (HIAL) நிறுவனத்தின் இயக்குனர் திரு. சோனம் வாங்சுக், கல்வித் துறையில் அவரது கண்டுபிடிப்புகள் மற்றும் தலையீடுகளுக்காக அறியப்பட்டவர். ஏனெனில் அவர் அமீர் கானின் '3 இடியட்ஸ்' பட கதாபாத்திரத்தின் உத்வேகமாக இருந்தார். 

“என்னைப் பொறுத்தவரை தொழில்முனைவோர், மேலும் மேலும் பணம் மட்டுமே சம்பாதித்துக்கொண்டே இருப்பவர்கள் அல்ல. தொழிலதிபர்கள் சிக்கலைத் தீர்ப்பவர்கள். நீங்கள் சிக்கலைத் தீர்ப்பவர்களாக இல்லை என்றால், நீங்கள் தொழில்முனைவோரே அல்ல. இரண்டாவதாக, நீங்கள் பணம் சம்பாதிப்பதோடு சிக்கலைத் தீர்த்தாலுமே கூட, நீங்கள் ஒரு நல்ல தொழில்முனைவோர் அல்ல. மற்றவர்கள் உங்களுடன் சேர்ந்து முன்னேற நீங்கள் உதவ வேண்டும். அப்போதுதான் நீங்கள் உண்மையான தொழில்முனைவோர்" என்றார்.

மேலும் படிக்க | அமேதியில போட்டிப் போடறதைப் பத்தி இப்ப என்ன பேச்சு? கடுப்படிக்கும் ராகுல் காந்தி

ஏஸ் வெக்டர் (AceVector) குழுமத்தின் (Snapdeal, Unicommerce மற்றும் Stellaro) இணை நிறுவனர் குணால் பாஹ்ல் பேசுகையில், “அடுத்த 20 ஆண்டுகளில், உலகம் முழுவதும் வாங்கப்படும் பெரும்பாலான மென்பொருள் தயாரிப்புகள் #MadeInIndia ஆக இருக்கும். அது நம் அனைவருக்கும் பெருமையை தேடி தரும். உலகில் எந்த நாடும் நம்மைப் போல டிஜிட்டல் மயமாக்கப்படவில்லை. UPI அல்லது NDC ஆதார், அல்லது அக்கவுன்ட் அக்ரிகேட்டர் இந்தியா ஸ்டேக், இந்தியா ஹெல்த் ஸ்டேக் - இவை இந்தியாவிற்கு வெளியே உள்ள உலகெங்கிலும் உள்ள யாருமே கேள்விப்படாதவை. இது எங்களுக்கு ஒரு தொடக்கம். எதிர்காலத்தைப் பற்றி நாங்கள் புத்துணர்வோடும் உற்சாகமாகவும் உணர்கிறோம். என்னவொரு அற்புதமான தருணத்தில் நாம் இந்தியாவில் இருக்கிறோம்" என்று மகிழ்ச்சியை பகிர்ந்தார்.

பந்தன் வங்கியின் CEO மற்றும் MD திரு. சந்திரசேகர் கோஷ், புதிதாக ஒரு வங்கியை பூஜ்ஜியத்திலிருந்து உருவாக்குவதில் பெற்ற தனது அடிப்படை அறிவிலிருந்து, வழங்கிய நடைமுறை ஞானத்தால் பங்கேற்பாளர்களின் மனதை கொள்ளை கொண்டார்.  

மேலும் படிக்க | சிறப்பாக வணிகம் செய்ய வேண்டுமா? ‘முக்தி’ நிலையில் இருங்கள்: வர்த்தக தலைவர்களுக்கு சத்குரு ஆலோசனை

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News