தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில்  வழங்கப்படும் மிக உயரிய விருது சாகித்ய அகாடமி விருது. மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பாக விளங்கும் சாகித்ய அகாடமி நிறுவனத்தால் 1955-ம் ஆண்டில் இருந்து இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.


தமிழ், மலையாளம், ஆங்கிலம் என மொத்தம் 24 மொழிகளில் சிறந்த படைப்பாளிகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. அந்தவகையில் தமிழில் இந்த ஆண்டுக்கான சாகித்ய அகடமி விருதுக்கு எழுத்தாளர் சோ.தர்மனுக்கு வழங்கப்பட்டுள்ளது. சூல் என்ற நாவலுக்காக சோ.தர்மனுக்கு சாகித்ய அகடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


ஈரம், தூர்வை, சோகவனம் உள்ளிட்ட 7 நூல்களை சோ.தர்மன் எழுதியுள்ளார். "கூகை" என்ற நாவலுக்காக ஏற்கனவே தமிழக அரசின் விருதை தர்மன் பெற்றிருக்கிறார்.