Saidai Duraisamy Son Vetri Duraisamy Body Found In Satluj River: சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் சடலம் சட்லஜ் நதியில் 9 நாட்களுக்குப் பின் கண்டெடுப்பு. கார் விபத்து நடந்த இடத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் சடலம் கிடைத்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கார் விபத்து:


கடந்த பிப்ரவரி 4ஆம் தேதியன்று இமாச்சல பிரதேசச்த்தின் கின்னவுர் மாவட்டத்தில் உள்ள பாங்கி நாலா அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்னோவா கார் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த கார், சட்லஜ் ஆற்றில் விழுந்த காரில் சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி, அவரது நண்பர் மற்றும் ஓட்டுநர் என மூன்று பேர் இருந்தனர். 


வெற்றி துரைசாமி பயணித்த கார் நாலா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரெண்ட காரின் ஓட்டுனருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது கட்டுப்பாட்டை இழந்த கார், மலைப்பகுதியின் குறுகலான சாலையில் சென்று கொண்டிருந்த போது அப்படியே கவிழ்ந்து சட்லஜ் ஆற்றில் விழுந்துள்ளது. இந்த விபத்தில், கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வெற்றி துரைசாமியின் நண்பர் கோபினாத், படுகாயங்களுடன் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். காரும், காருக்குள் இருந்த நண்பரும் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து, வெற்றி துரைசாமியின் உடல் காணாமல் போயிருந்தது. அவரது உடலை கடந்த 9 நாட்களாக மீட்புக்குழுவினர் தேடி வந்தனர். 


மேலும் படிக்க | தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் தகவல்!


காணாமல் போன உடல்..கண்டெடுக்கப்பட்ட மூளை:


வெற்றி துரைசாமி சென்ற கார் விபத்துக்குள்ளாகி கண்டெடுக்கப்பட்ட பிறகு 7 நாட்களாகியும் அவர் குறித்து எந்த வித தகவலும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில், கடந்த 6ஆம் தேதி சட்லஜ் நதியின் கரையோரம் உள்ள பாறை இடுக்குகளில் மூளையின் திசுக்கள் சில கண்டெடுக்கப்பட்டன். அது மட்டுமல்லாமல், ரத்த மாதிரிகளும் அருகில் எடுக்கப்பட்டது. இந்த நிலையில், அந்த மாதிரிகளை சேகரித்த போலீஸார் அது வெற்றி துரைசாமியுடையது தானா என்று தெரிந்து கொள்ள டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், இந்த பரிசோதனை முடிவுகள் தெரிய 3 நாட்கள் ஆகும் என கூறப்பட்டது. 


உடல் கண்டெடுப்பு:


வெற்றி துரைசாமியின் உடலை கண்டு பிடிக்கும் பணி, வெகு தீவிரமாக நடைப்பெற்றது. சில நாட்களுக்கு முன்பு, தன் மகன் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.1 கோடி சன்மானம் கொடுப்பதாக சைதை துரைசாமி தெரிவித்திருந்தார். இந்த நிலையில், வெற்றி துரைசாமியின் சடலம் 9 நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பிறகு கண்டெடுக்கப்பட்டுள்ளது. வெற்றியின் உடல், சட்லஜ் நதியில் 6 கி.மீ தொலைவில் கிடைத்துள்ளது.


சினிமாவில் ஆசை உள்ளவர்..


வெற்றி துரைசாமி, சினிமா மீது ஆசை கொண்டவர். 45 வயதாகும் இவர், படங்கள் இயக்க வேண்டும் என்று ஆசை கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. பயணங்கள் மீதும் தனிப்பிரியம் கொண்ட இவர், சுற்றுலாவிற்காக இமாச்சலம் சென்றிருந்த போது ஏற்பட்ட கோர விபத்தில்தான் இவர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | அப்பாவு டூ ஆர்என் ரவி: 50 ஆயிரம் கோடி கேட்டு வாங்கி கொடுங்களேன்..! ஆளுநர் ரியாக்ஷன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ