புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்ட 3-வது பயங்கரவாதி சடலம் மீட்பு!

ஜம்மு மாநிலம் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட 3-வது பயங்கரவாதியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது!

Last Updated : Jan 1, 2018, 03:16 PM IST
புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்ட 3-வது பயங்கரவாதி  சடலம் மீட்பு! title=

ஜம்மு மாநிலம் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட 3-வது பயங்கரவாதியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அவந்திபூரா  பகுதியில் சிஆர்பிஎப் படையின் 185 பாட்டாலியன் பிரிவின் முகாம் மீது பயங்கரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பயங்கரவாதிகளில் ஒருவன் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியானது!

இந்த தாக்குதலில் 3 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும் ஒரு வீரருக்கு, தாக்குதலின் போது மாரடைப்பு ஏற்பட்டதால் அவரும் உயிரிழந்தார். இத்தாக்குதலில் காயம் அடைந்த ராணுவ வீரர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 

இந்த துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மூன்றாவது நபரின் உடல் காலை கண்டெடுக்கப்பட்டது.

Trending News