சென்னையில் கடந்த புதன்கிழமை மாலை பெண் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எப்போதும் பரபரப்பாக இருக்கும் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் அரங்கேறியது. ரயில்களில் சமோசா விற்பனை செய்து வந்த ராஜேஸ்வரி என்பவர் வழக்கமாக அன்று மாலையும் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் சமோசா விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த மர்ம கும்பல் அவரை வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியோடியது. இந்த சம்பவம் தீயாக பரவிய நிலையில் காவல்துறையினர் கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | கிளிசரின் போட்டு கண்ணீர் வடித்தவர் எங்கே? குஷ்பூவுக்கு அமைச்சர் கீதா ஜீவன் கேள்வி


ராஜேஸ்வரியை கொலை செய்த கொலையாளிகள் அப்போது வந்த மின்சார ரயில் ஏறியே தப்பிச் சென்றதால் மற்ற ரயில் நிலையங்களில் இருக்கும் சிசிடிவி கேமராக்களைக் கொண்டு கொலையாளிகளை காவல்துறையினர் அடையாளம் காண முயற்சி செய்தனர். தீவிர விசாரணையில் இப்போது ராஜேஸ்வரியின் தங்கை நாகவள்ளி, சூர்யா, ஜெகதீசன், சக்திவேல், ஜான்சன், ஆகியோரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். 



இவர்களை ரகசிய இடத்தில் வைத்து ரயில்வே தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தகாத உறவின் காரணமாக ராஜேஸ்வரியின் தங்கை நாகவள்ளி சிறைக்குச் சென்றுள்ளார். இதற்கு ராஜேஸ்வரி காரணமாக இருந்ததால் அவரை கொலை செய்ய திட்டம் வகுத்துள்ளார். இதனடிப்படையில் கூட்டாளிகளைக் கொண்டு கடந்த புதன்கிழமை அக்கா என்றும் பாராமல் ரயில் நிலையத்திலேயே ராஜேஸ்வரியை படுகொலை செய்துள்ளனர். 



இது குறித்து ரயில்வே எஸ்.பி. பொன்ராமு தாம்பரம் ரெயில் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், இந்த கொலை வழக்கில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு 3 நாட்கள் தொடர்ந்து புலன் விசாரணை செய்து 5 பேரை கைது செய்துள்ளோம். அவர்கிடமிருந்து 4 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொலை செய்து விட்டு 3 பேர் கோவளத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் தனிப்படை போலீசார்  அங்கு விரைந்து அவர்களை கைது செய்தனர்.


மேலும், 2 பேர் நங்கநல்லூரில் கைது செய்யப்பட்டனர். ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் அமைப்பதை துரிதப்படுத்தி உள்ளோம். இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து ரயில் நிலையங்களில் சிசிடிவி அமைக்கப்படும். ரயில் நிலையத்தில் பயணிக்கும்போது பெண்கள் யாரும் இனி பயப்பட வேண்டாம். பெண்களின் பாதுகாப்பை ரெயில்வே போலீஸ் உறுதி செய்வோம்" என தெரிவித்தார். 


மேலும் படிக்க | Manipur Video: அரசு ஒன்றும் செய்யவில்லை... மனவேதனையை பகிர்ந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ