சக்க போடு போடு ராஜா: டிசம்பர் 22-ல் வெளியீடு!
சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள `சக்க போடு போடு ராஜா` திரைப்படம் டிசம்பர்-22 வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.
ஜி.எல். சேதுராமன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் 'சக்க போடு போடு ராஜா'. இதில், வைபவி சாண்டல்யா, விடிவி கணேஷ், விவேக் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு, சிம்பு இசையாமைத்துள்ளர்.
இத்திரைப்படம் வரும் டிசம்பர் 22-ம் தேதி திரைக்கு வருவதாக நடிகர் சந்தானம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட விடுமுறைகளையொட்டி திரைப்படம் வெளிவருவதால் வசூல் ரீதியாக நல்ல வரவேற்ப்பு வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது.