தமிழக சட்டமன்றத்தின் இன்றைய கூட்டத்தொடரில், எம்.எல்.ஏ -களின் ஊதிய உயர்வு மசோதா தாக்கல் செய்யப்படும்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்றை கூட்டத்தொடரில், சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதிய உயர்வு மசோதாவினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.


கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடத்த கூட்டத்தொடரின் போது முதலமைச்சர் பழனிசாமி, சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார். இதற்கான மசோதா இன்று தாக்கல் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 


இதன்மூலம் எம்.எல்.ஏ-களின் மாத ஊதியம் 55 ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.1,50,000 ஆக அதிகரிக்கும். மசோதா நிறைவேற்றப்பட்டால் எம்.எல்.ஏ -கள் அரியர்ஸ் தொகையுடன் சேர்த்து தலா ரூ. 3,50,000 பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.



போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு கோரி போராட்டம் நடத்தி வரும் நிலையில் எம்.எல்.ஏ-களின் ஊதிய உயர்வு மசோதா தாக்கல் செய்யப்படவிருப்பது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது!