சம்பள பாக்கி விவகாரம் : சிவகார்த்திகேயனிடம் கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம்
சம்பள பாக்கி விவகாரம் தொடர்பாக மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மனுத்தாக்கல் செய்தது ஏன் என நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மிஸ்டர் லோக்கல் படத்திற்காக தமக்கு பேசப்பட்ட சம்பளத்தில் நிலுவையில் உள்ள சுமார் 4 கோடி சம்பளத்தை வழங்க தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு உத்தரவிடக்கோரி நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில் தனக்கு வழங்க வேண்டிய தொகையை தரும் வரை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் படங்களை வெளியிட தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தயாரிப்பாளர் ஞானவேல் தரப்பில், மிஸ்டர் லோக்கல் படத்தால் தனக்கு 20 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அச்சமயத்தில் வினியோகஸ்தர்களுடன் பிரச்சினை ஏற்பட்ட போது, சம்பள பாக்கி 2 கோடியே 40 லட்சம் வழங்க வேண்டாம் எனக் கூறி விட்டு, உண்மை தகவல்களை மறைத்து சிவகார்த்திகேயன் இந்த வழக்கை தெடர்ந்துள்ளதாகவும் மேலும் டி.டிஎஸ் தொடர்பாக சிவ கார்த்திகேயன் தொடர்ந்த வழக்கு வேறு அமர்வில் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க | மோடி முகத்தில் கத்தி : விஜய் ரசிகர்கள் மீது போலீஸில் புகார்
இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக மூன்று ஆண்டுகள் கழித்து மனுத்தாக்கல் செய்தது ஏன் எனவும் டி.டி.எஸ். விவகாரம் தொடர்பாக ஏற்கனவே ஒரு மனு நிலுவையில் இருக்கும் போது மற்றொரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது ஏன் எனவும் நடிகர் சிவகார்த்திகேயன் தரப்பிற்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதனையடுத்து இரு தரப்பு வாதங்களுக்காக விசாரணையை ஏப்ரல் 13ம் தேதிக்குத் தள்ளிவைத்து உத்தரவிடப்பட்டது.
மேலும் படிக்க | தனுஷ் என்னை காதலித்தார் - நடிகையின் ஓபன் டாக்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR